ஆப்கானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை.. விரைவில் மீட்பு: இந்திய வெளியுறவுத்துறை!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள், மீட்பு பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
காபூலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானம் களமிறங்கி உள்ளது. இந்திய விமானப்படையின் குளோப்மாஸ்டர் C17 ரக போர் விமானம் மீட்பு பணிக்காக காபூல் சென்றுள்ளது. அங்கு இருக்கும் இந்திய மக்கள், தூதரக அதிகாரிகள் இதன் மூலம் மீட்கப்படுவார்கள். 500 பேர் வரை முதல் கட்டமாக இதில் மீட்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய வெளியுறைவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இந்தியாவின் மீட்பு பணிகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை மீட்பதே எங்களின் முதல் குறிக்கோள்.
முக்கியமாக ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் சீக்கியர்கள், இந்துக்களை மீட்க முக்கியத்துவம் தரப்படும். இப்போது பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து தொடங்கியதும் இவர்கள் மீட்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் நபர்களுக்கு அதற்கான வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நான் கவனமாக இருக்கிறோம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களுடன் பேசி வருகிறோம்.
ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் இந்தியாவோடு பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இந்தியாவுடன் கல்வி தொடங்கி கட்டமைப்பு பணிகள் வரை பல விஷயங்களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலர் பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications