காஷ்மீர் விவகாரம்.. அரசின் முடிவு.. நல்லதா கெட்டதா..வரலாறு முடிவு செய்யும்..அமித் ஷா பரபரப்பு பேச்சு
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசின் முடிவு நல்லதா, கெட்டதா என்பதை வரலாறு முடிவு செய்யும் என உள்துறை அமைச்சர் அமித் ஷழ லோக்சபாவில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசன பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை சட்டமாக நிறைவேற்றும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று (செவ்வாய்கிழமை) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் இழைத்து வந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் வரும் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.
அதற்கு பின்னரே சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் எத்தகைய தடையை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிய வரும். காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு எடுத்துள்ள முடிவு நல்லதா, கெட்டதா என்பதை வரலாறு முடிவு செய்யும். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" இவ்வாறு கூறினார்.
முன்னதாக விவாத்தின் போது எம்பி சௌத்ரி, பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமும் உள்ள காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானது தானே என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமித் ஷா ஜம்மு காஷ்மீரின் இப்போது உள்ள பகுதி மட்டுமல்ல பாகிஸ்தானிடம் உள்ள காஷ்மீரின் பகுதிகள், சீனாவிடம் உள்ள பகுதிகளையும் சேர்த்து இந்தியாவில் சேர்க்க என் உயிரையும் கொடுப்பேன் என ஆவேசமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications