ஷாக்! இயர்போன் பயன்படுத்திய 18 வயது இளைஞருக்கு.. திடீரென காதுகள் கேட்கவில்லை.. ஜாக்கிரதை மக்களே
டெல்லி: வெறும் 18 வயதே ஆன இளைஞர் ஒருவர் அதிகமாக இயர்போன்களை பயன்படுத்தியதால் தனது காது கேட்கும் திறனையே இழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
இந்த நவீன யுகத்தில் தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மொபைல் போன்கள் சில ஆண்டுகளில் எங்கேயோ போய்விட்டது. பேச மட்டுமே என்பதைத் தாண்டி பல விஷயங்களுக்கு இப்போது மொபைல் பயன்படுகிறது.
ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது அனைத்தையுமே நம்மால் மொபைல் போன் மூலமே செய்ய முடிகிறது. அந்தளவுக்கு மொபைல் பயன்பாடு இப்போது மிகவும் அவசியமாகிவிட்டது.

இயர்போன்: வெளியே செல்லும் வீட்டைப் பூட்ட மறந்தாலும் இப்போது யாருமே மொபைலை மறப்பதில்லை. அதேபோல எப்போதும் நம் காதுகளில் இயர்போன்களும் ஒட்டிக் கொள்கிறது. ப்ரீயாக இருக்கும் நேரத்தில் பாட்டுக் கேட்க என்ற நிலை மாறி இப்போது 24* 7 நமது காதுகளில் இயர்போன் ஒட்டிக்கொள்கிறது. வண்டி ஓட்டும் போது கூட சிலர் இயர்போன்களில் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணிப்பது கொடுமையிலும் கொடுமை.
இதிலும் இயர்பட்கள் எனப்படும் வயர்லெஸ் இயர்போன்கள் வந்த பிறகு அதன் பயன்பாடு அதிகமாகவிட்டது. பலரும் இப்போது தங்கள் நாளின் பெரும்பகுதியை இந்த வயர்லெஸ் இயர்போன்கள் உடனே செலவிடுகிறார்கள். இருப்பினும், நீண்ட நேரம் இயர்பட்களை பயன்படுத்துவது நமது காது குழாய்கள் பாதிக்கும். இது நீண்டகால நோக்கில் காது கேட்கும் திறனையும் பாதிக்குமாம்..
பாதிப்பு: சில நேரங்களில் இதன் பாதிப்புகளைச் சரி செய்ய அறுவை சிகிச்சை கூட தேவைப்படும். இதற்கிடையே அதீதமாக இயர்போன் பயன்படுத்திய இளைஞர் ஒருவருக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வேறு ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவம் இல்லை... நமது நாட்டில் நடந்த ஒன்று.. இது நாம் எவ்வளவு தூரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
உத்தரப்பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட தொற்று காரணமாகச் சிறுவனுக்குக் காது கேட்காமல் போய் உள்ளது. இதைச் சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காது கேட்கும் திறன் திரும்பியுள்ளது.
காது கேட்கவில்லை: உரிய நேரத்தில் அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இருந்திருந்தால் காது கேட்கும் திறனை அந்த நபர் முற்றிலுமாக இழந்திருப்பார். இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் போக்கு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இதே போன்ற தொற்று ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

ஒருவர் நீண்ட நேரம் இயர்பட்களை அணியும்போது, காது குழாயில் வியர்வைக் காரணமாக ஈரப்பதம் அதிகரிக்கிறது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எளிதாக அதிகரிக்க நல்ல ஒரு இடமாக அமைகிறது. நமது காது குழாய்க்குக் காற்றோட்டம் தேவைப்படுகிறது. நீண்ட நேரம் அதை மூடி வைப்பது வியர்வையை அதிகரித்துத் தொற்று பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது.
தடுக்கும் வழி: இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிகள் உள்ளன. முதலில் உங்கள் இயர்போன்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். அடுத்து இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்தாமல், அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். அதேபோல காதின் குழாய்களைச் சுத்தப்படுத்துங்கள்.
-
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"ஓவர் திங்கிங் உங்களை மெதுவாக அழிக்கிறதா?... இந்த 5 விஷயங்களை செய்தால் வாழ்க்கையே மாறலாம்!" -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications