14 குழு! 9 புல்டோசர்! 1500 போலீசார்! பரபரத்த டெல்லி! கட்டிட இடிப்பிற்கு நடுவே வந்த நீதிமன்ற தடை!
டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சியின் 14 குழு, 9 புல்டோசர், 1500 போலீசார் ஈடுபட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த நடவடிக்கையால் டெல்லியில் இன்று பரபரப்பு தொற்றி கொண்டது. டெல்லியில் நடந்தது என்ன என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவானது. இது வன்முறையாக மாறியது.
இதனால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு
இந்நிலையில் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் டெல்லி வடமேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‛‛பொதுப்பணித்துறை, உள்ளாட்சி, போலீஸ், சுகாதாரம், வடிகால் வாரியம் சார்பில் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 அல்லது ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பெண் போலீஸ் உள்பட 400 போலீஸ்கார்களை பாதுகாப்புக்காக அனுப்ப வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

1500 போலீசார் குவிப்பு
இதையடுத்து இன்று காலை ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி சார்பில் 14 குழுக்களாக அதிகாரிகள் வந்திருந்தனர். 9 புல்டோசர்கள் அணிவகுத்தன. வன்முறை நடந்த பகுதி என்பதால் 400 போலீசாருக்கு பதில் 1500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்போடு மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்ததன் அடிப்படையில் புல்டோசர்கள் கட்டடங்களை அகற்றின.

மக்கள் பரிதவிப்பு
இதனால் டெல்லி பரபரப்பானது. மேலும் புல்டோசர்கள் உதவியுடன் கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனால் உயரமான கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் உருக்குலைந்தன. இதற்கிடையே கட்டடங்களை அகற்ற நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ‛‛இது ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் நடவடிக்கை (Anti Encroachment Drive)தான். ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் (Demolition) நடவடிக்கை அல்ல. இதனால் நோட்டீஸ் அனுப்ப வேண்டியது இல்லை'' என பதிலளிக்கப்பட்டது. இதனால் அந்தபகுதியில் வசிக்கும் மக்கள் பரிதவித்தனர்.

நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே தான் ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து 2 மணிநேரம் கழித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. டெல்லி வடக்கு மாநகராட்சியின் அதிகாரம் என்பது பாஜகவிடம் உள்ளது. இதனால் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

காங்கிரஸ், ஆம்ஆத்மி விமர்சனம்
இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, ஆம்ஆத்மி தலைவர்கள் உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை வைக்கின்றனர். வடக்கு டெல்லி மாநகராட்சியை பாஜக அதிகாரத்தில் இருப்பதால் தான் ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் ஏழை முஸ்லிம் மக்களின் வீடு, கடைகளை இடித்து அகற்றுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications