லண்டனில் தீட்டப்பட்ட பிளான்! ஐஎஸ்ஐ ப்ளூ பிரிண்ட்! இந்தியா கண்முன் வங்கத்தை பாக் வீழ்த்தியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுவாக சர்வதேச அளவில் உலக அரசுகள் எப்படி எல்லாம் கவிழுமோ அப்படித்தான் வங்கதேசம் கவிழ்ந்து உள்ளது. அதாவது coup என்று அழைக்கப்படும் அரசியல் அல்லது மக்கள் புரட்சிக்கு என்று சில ப்ளூ பிரிண்ட் உள்ளது. அதாவது முதலில் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி.. அது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்பட்டு, ஏதாவது ஒரு விஷயத்தில் போராட்டமாக மாறி. அது பெரிய போராட்டமாகி பின்னர்கலவரம் ஆகி .. தாக்குதல்கள் நடந்து ஆட்சி கவிழும். அப்படி ஒரு கச்சிதமான ப்ளூ பிரிண்ட்தான் வங்கதேசத்தில் நடந்து உள்ளது.. அது தீட்டப்பட்ட இடம் லண்டன்.. சவூதி அரேபியா.. தீட்டியது யார் என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயமே!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் இணைந்து லண்டனில் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாக வங்கதேச, இந்திய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான தேசியவாதக் கட்சியின் (BNP) செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானுக்கும், சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புதான் இதற்கு தொடக்கம் என்கிறார்கள்.

bangladesh sheikh hasina

இதை தொடர்ந்து ஆட்சியை கவிழ்க்க லண்டனில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. உதாரணமாக வங்கதேச போராட்டத்தில் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தை தூண்டிய பிரபல ஐடிக்கள் பெரும்பாலும் பாகிஸ்தானை சேர்ந்தது. ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராக 50000 க்கும் மேற்பட்ட கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து எதிர்மறை ட்வீட்களை செய்துள்ளன.

திட்டம் என்ன?: திட்டப்படி, பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் ஹசீனாவின் அரசாங்கத்தை சீர்குலைத்து, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சியான பிஎன்பியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தபோராட்டங்களை லண்டனில் இருந்து திட்டமிட்டு உள்ளன.

சீனா, ஐஎஸ்ஐ மூலம் கலவரத்தை உருவாக்கி ஆட்சியை முடித்து வைத்து சுபம் போட்டுள்ளனர். இது எல்லாம் இந்தியாவின் கண்முன் நடந்து உள்ளது. வங்கதேசத்தில் இப்படி ஒரு புரட்சி நடக்க போவதை முன்கூட்டியே இந்தியா உணர்ந்திருக்க வேண்டும். உளவுத்துறையின் மூலம் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். முன்கூட்டியே தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் அது இந்தியாவின் தவறு. அப்படி தெரிந்திருந்த பட்சத்தில் கலவரம் கைமீறாமல் இருக்க உதவிகளை வழங்கி இருக்க வேண்டும்.

கடந்த வருடம் மட்டும் ஷேக் ஹசீனாவை மோடி 10 முறை சந்தித்தார். அப்போதே இது போன்ற விஷயங்களை இந்தியா பேசி தயாராகி இருக்க வேண்டும். வங்கதேசம் என்ற நாடு உருவாக இந்தியாதான் காரணம். அமெரிக்கா, சீனாவை எதிர்த்து இந்தியா வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் அரசியல் சாணக்யத்தனம் காரணம். தற்போது அது மிஸ் ஆகி உள்ளது.

ஐ.எஸ்.ஐ திட்டம்: ஜமாத்-இ-இஸ்லாமி எனப்படும் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர் பிரிவுதான் போராட்டத்தை தொடங்கியது. இது ஐ.எஸ்.ஐ-ஆதரவு கொண்ட அமைப்பு ஆகும். ஹசீனாவிற்குப் பதிலாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நட்பான ஆட்சியைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை இந்த அமைப்புதான் தொடங்கியது. முக்கியமாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜமாத்தே இஸ்லாமியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவதுதான்.

உளவுத்துறை தகவல்களின்படி, இஸ்லாமிய சத்ர ஷிபிர் உறுப்பினர்களால் பல மாதங்களாக மிக நுணுக்கமான திட்டம் போடப்பட்டு பணிகள் நடந்து உள்ளன. இதற்கான நிதியின் கணிசமான பகுதி பாகிஸ்தானில் செயல்படும் சீன நிறுவனங்களிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது சீனா தந்த பணத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு அமைப்பான இஸ்லாமிய சத்ர ஷிபிர் மூலம் வங்கதேச அரசு கவிழ்க்கப்பட்டு உள்ளது.

போராட்டத்தை தூண்டிவிட செய்யப்பட்டபோஸ்டுகள் எல்லாம் பெரும்பாலும் பாகிஸ்தான், அமெரிக்கா ஆட்களிடம் இருந்து வந்துள்ளது. இரண்டு நாடுகளில் உள்ள பாகிஸ்தான் அமைப்புகளிடம் இருந்து இந்த போஸ்டுகள் வந்துள்ளன.

ஆதி முதல் அந்தம் வரை: கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய போராட்டமாக மாறி உள்ளது. டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்வலர்கள், பொதுமக்கள் vs காவல்துறை, ஆளும்கட்சி ஆதரவாளர்கள் இடையிலான கலவரமாக இந்த போராட்டம் மாறி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 1971ல் நடத்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது போரில் கலந்து கொண்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்தே அங்கே போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் முதலில் போராட்டத்தில் குதித்தனர். .

இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.. அதற்கு பதிலாக சாதாரண மெரிட் சிஸ்டம் வேண்டும் என்றும் அறிவித்து இவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இடஒதுக்கீடு மட்டுமின்றி 15 வருடங்களாக ஹசீனா ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த மக்கள் விலைவாசி தொடங்கி பாதுகாப்பு வரை பல விஷயங்களை குறிப்பிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் போராட்டம் தற்போது அங்கே அரசுக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+