பாகிஸ்தானின் அணு ஆயுத ரெட் லைனை.. துணிச்சலாக தாண்டிய இந்தியா? அது என்ன லைன்? இனி என்ன ஆகும்?
சென்னை: ஒவ்வொரு அணு ஆயுத நாட்டிற்கும் ஒரு நியூக்ளியர் ரெட் லைன் உள்ளது. இதை ஒரு நாடு தாண்டும் போது தாண்டிய நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும். அதாவது அணு ஆயுத சோதனைக்கு பின் ஒவ்வொரு நாடும் தங்கள் கொள்கைகளை வகுக்கும். சில நாடுகள் முறையாக கொள்கைகளை வகுக்காது. வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருந்தாலும் முறையான அணு ஆயுத கொள்கை இல்லை.
அவர்கள் எப்போது அணு ஆயுதத்தை எடுப்பார்கள், எதற்கு பயன்படுத்துவார்கள் என்று கொள்கை இல்லை. ஆனால் இந்தியாவிடம் அணு ஆயுத கொள்கை உள்ளது. பாகிஸ்தானிடமும் அணு ஆயுத கொள்கை உள்ளது.
இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுத ரெட் லைன் உள்ளது. இந்த கோட்டை தாண்டும் பட்சத்தில் அணு ஆயுத போராக மாறும். இந்தியா, பாகிஸ்தான் எந்த புள்ளியில் இந்த கோட்டை போட்டு உள்ளது என்று பார்க்கலாம். பாகிஸ்தானின் அணு ஆயுத ரெட் லைனை இந்தியா ஏற்கனவே மீறி விட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அணு ஆயுத ரெட் லைன்
இந்தியாவின் முதல் ரெட் லைன்.. அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தக்கூடாது என்பதே.. அதாவது no first use (NFU) கொள்கை. ஒன்று எதிரி நாடு அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அணு ஆயுதத்தை எல்லைக்கு கொண்டு வந்து பயன்படுத்த ரெடியாக வேண்டும். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட அணு ஆயுத எச்சரிக்கை எதிரி நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக விடப்பட வேண்டும்.
அதுவரை.. இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது.. ஆனால் அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால் பெருமளவில் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் சிவப்பு கோடு வெளிப்படையாக நம் கொள்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் வரைந்த ரெட் லைன்
பாகிஸ்தானிடம் மேற்கண்ட கொள்கை இல்லை. அதாவது அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தக்கூடாது.. அதாவது no first use (NFU) கொள்கை அந்த நாட்டிடம் இல்லை. ஒன்று, எதிரி நாடு அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்தாமலே இந்தியா மீது அவர்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால் வேறு சில லைன்கள் உள்ளன..
எல்லைக்குள் நடக்கும் தாக்குதல் - இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமாக நுழைந்து, அல்லது ஏவுகணை மூலம் தாக்கினால்.
ராணுவ வரம்பு - இந்தியப் படைகள் பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ள ராணுவ பகுதிகளை தாக்கினால்.
பொருளாதார நெருக்கடி கொடுத்தல் - கடற்படை முற்றுகை அல்லது பொருளாதார மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாகிஸ்தான் தாக்கும்.
இந்தியா தாண்டிவிட்டது
பாகிஸ்தானின் அணு ஆயுத ரெட் லைனை இந்தியா ஏற்கனவே மீறி விட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தியப் படைகள் பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ள ராணுவ பகுதிகளை ஏவுகணை மூலம் தாக்கிவிட்டது. லாகூர் போன்ற பாகிஸ்தானின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டுவிட்டது.
விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு:
நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
PAF முரிட் விமான தளம், சக்வால் தாக்கப்பட்டுவிட்டது.
இதில் ஷோர்கோட் பாகிஸ்தான் உள்ளே இருக்கும் தளம் ஆகும். இதையும் கூட இந்தியா தாக்கி உள்ளதால், பாகிஸ்தானின் ரெட் லைன் தாண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான், அணு ஆயுத ஆய்வு குழு கூட்டத்தை அந்த நாட்டு பிரதமர் அழைத்துள்ளார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications