பாஜக தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்.. உ.பி தேர்தலில் புதிய வியூகத்தால் யோகிக்கு சிக்கல்..!

உபியில் ஆம் ஆத்மி களமிறங்குவதாக அறிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நடக்க போகும் சட்டமன்றத் தேர்தல்கள் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி முடிவாகி உள்ளது, பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் ஆம் ஆத்மி வாக்குகளை பிரித்தால் அது பாஜகவுக்கும் சாதகமாக அமையும் என்கிற கருத்தும் ஓடுகிறது.

இன்னும் சில மாதங்களில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக கடந்த வருடமே தன்னுடைய திட்டங்களை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

காங்கிரஸ் மட்டுமே இத்தனை காலமும் பாஜகவுக்கு எரிச்சலை தந்து வந்த நிலையில், ஆம் ஆத்மியும் களம் காண போகிறது..

அறிவிப்பு

அறிவிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் என்பவரை அறிவித்தும் விட்டார் கெஜ்ரிவால்.. இந்த வேட்பாளரை அறிவிக்கும்போதே பாஜகவுக்கு ஒரு குட்டு வைத்திருந்தார்.. "அரசியல்வாதிகள் அரசாங்க சொத்தை சூறையாடுகின்றனர்...

 அரசியல்வாதி

அரசியல்வாதி

மக்களுக்கும் இத்தகைய அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது... அதனால்தான் ராணுவ அதிகாரியை முதல்வராக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளது... பாஜக இந்த வருடத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை நாசமாக்கிவிட்டது" என்றார். இதுதான் பாஜகவுக்கு ஆம் ஆத்மி தந்த முதல் ஷாக்.

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. .. அங்கு அமரீந்தர் சிங் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்... அங்கும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.. அதனால்தான், சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இப்போதே அங்கு பேச ஆரம்பித்துவிட்டார்..

 வாக்குறுதி

வாக்குறுதி

அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான வாக்குறுதியையும் தந்தார்.. "ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்றால், மின்சார பில் தள்ளுபடி வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும்.. இலவசமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்றார்.. இந்த வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதியானது பாஜகவுக்கு அடுத்த ஷாக்காக அமைந்தது.

முனைப்பு

முனைப்பு

இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேச தேர்தலையும் ஆம் ஆத்மி சந்திக்க முனைகிறது.. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே, 2022-ல் உபியில் நடக்க போகும் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்துவிட்டார்.. அதற்கேற்றபடி, அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி உபிக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்..

யாத்திரை

யாத்திரை

இப்படிப்பட்ட சூழலில்தான், ஆம் ஆத்மி கட்சி வரும் செப்டம்பர் 14ம் தேதி அயோத்தியில் திரங்கா யாத்திரையை நடத்த முனைகிறது.. இந்த யாத்திரைக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் தலைமை தாங்க உள்ளனர்.. அதாவது, இந்து அடையாளங்கள், மதம் மற்றும் தேசியவாதத்தை மிகவும் வேறுபட்ட வகையில் பிரித்தெடுத்தல் என்பது பாஜகவின் நிலைப்பாடு.. இதைதான் இந்த யாத்திரை வேறுபடுத்தி காட்ட போவதாக கூறுகிறார்கள்.

தேசியம்

தேசியம்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டை முன்னிட்டு அடுத்த ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆம் ஆத்மி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.. சுருக்கமாக சொன்னால், தேசியம் என்பது மக்களுக்கு உரிமைகளை அவர்களுக்கே வழங்குவதாகும் என்று ஆம் ஆத்மி பரமாக நம்புகிறது... அது நல்ல கல்வியாக இருக்கலாம்.. அல்லது வலுவான சுகாதாரமாக இருக்கலாம்... எனவே, வரப்போகும் தேர்தலில் உபியில் உள்ள 403 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கைப்பற்ற முயற்சியில்தான் களமிறங்கி உள்ளது...

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

உத்தரப்பிரதேசத்தில் இப்போது ஆளும் பாஜக ஆட்சியானது அனைத்துவிதமான வியூகங்களுடன் களத்தில் தயாராக நிற்கிறது.. அதிலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறது.. உபியில் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் வகையில் இந்துத்துவா கொள்கையை பாஜக முன்வைக்கிறது என்றால், அதற்கு மாற்றான ஒரு முன்னெடுப்பை ஆம் ஆத்மி எடுக்கிறது. ஆம் ஆத்மியின் அத்தனை முன்னெடுப்புகளையும் பாஜக எப்படி சமாளிக்க போகிறது என்பதைதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

அதே நேரம் ஆம் ஆத்மி பாஜகவின் பி டீமாக களம் இறங்கியுள்ளதா? என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. கடந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகளைப்பிரிக்க தந்திரமாக ஒவைசியை நிற்க வைத்து வாக்குகளை பிரித்து வென்றதாக பாஜக மீதும், ஒவைசி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இம்முறை அந்த இடத்தில் கேஜ்ரிவால் பயன்படுத்தப்பட போகிறாரா என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+