வேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்
டெல்லி: டெல்டா கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விளக்கமளி
த்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாட்டில் இப்போது தான் குறைந்துள்ளது. இதனால் வேக்சின் பணிகளை மத்திய அரசு மெல்லத் தீவிரப்படுத்தி வருகின்றது.
கொரோனா தடுப்பூசிகள் வைரசால் ஏற்படும் தீவிர பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் பெருவாரியாகக் குறைக்கின்றன. ஆனால், அதேநேரம் வேக்சின்கள் 100% நம்மை முழுவதுமாக காக்கும் என்றும் சொல்ல முடியாது.

கொரோனா பாதிப்பு
தடுப்பூசி பணிகள் முழுமையாக முடியாத போது பல்வேறு நாடுகளும் தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் கொரோனா பாதிப்புகளும் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு ஒருவருக்கு ஏற்படும் வைரஸ் பாதிப்புகள் பெரும்பாலும் லேசான பாதிப்பாகவே உள்ளது. அவை தீவிரமான கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

கொரோனா உயிரிழப்புகள்
அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுபவர்களில் 97% தடுப்பூசி போடாதவர்கள். அதேபோல 99.5% உயிரிழப்புகள் பெரும்பாலும் கொரோனா வேக்சின் போடாதவர்கள் மத்தியில் தான் ஏற்படுகிறது. அதாவது கொரோனா பாதிப்பை, குறிப்பாக உயிரிழப்புகளை வேக்சின் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைக்கிறது.

மாஸ்க்
அதேநேரம் நாட்டில் வேக்சின் பணிகள் இன்னும் முடியவில்லை. ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே முதல்கட்டமாக வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், வேக்சின் போட்ட பிறகும்கூட, மாஸ்க் அணிவது தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எப்போது வரை
அதேபோல வயதானவர்கள், ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள் வேக்சின் போட்டுக் கொண்ட பிறகும் மாஸ்க்குகளை தொடர்ந்து அணிய வேண்டும். புதிய உருமாறிய கொரோனா வகைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. இதனால் நாட்டில் வேக்சின் பணிகள் முழுவதுமாக முடியும் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும்கூட ஒருவர் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு
சர்வதேச மக்கள் தொகையில் வெறும் 13.4% மக்களுக்கு மட்டுமே வேக்சின் முழுவதுமாக போடப்பட்டுள்ளது. அதிலும்கூட ஒரு சில பணக்கார நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வேக்சின் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, பல ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்களுக்குக் கூட வேக்சின் பணிகள் முழுவதுமாக நிறைவடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications