நாட்டுக்காக எல்லையில் போரிட்டேன்- மனைவியை பாதுகாக்கலையே-மணிப்பூர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கதறல்
டெல்லி: நாட்டை பாதுகாக்க யுத்தத்தில் ராணுவ வீரராக பங்கேற்றேன்; ஆனால் என் மனைவி, கிராம மக்களை பாதுகாக்க முடியவில்லை என மணிப்பூரில் fought for the country, but couldn't protect my wife'
நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் குமுறலை கொட்டியுள்ளார்.

மணிப்பூரில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே மே 3-ந் தேதி முதல் தொடர் வன்முறை நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறையில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் தொடரும் வன்முறைகள் ஓயவில்லை.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மிக கடுமையாக விமர்சனங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூரில் 2 குக்கி இனப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட மைத்தேயி இன கும்பலால் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தேசத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்த சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். நாடாளுமன்றம் இந்த பிரச்சனையால் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியவர் என வடகிழக்கு மாநிலங்களின் ஊடகமான https://nenow.in/ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த முன்னாள் ராணுவ வீரர் அளித்ததாக சில கருத்துகளையும் https://nenow.in/ வெளியிட்டுள்ளது.
அதில், கார்கில் யுத்தத்தில் தேசத்துக்காக போரிட்டேன். இலங்கையில் இந்திய அமைதிப் படையில் இணைந்து பணியாற்றினேன். என்னுடைய நாட்டைப் பாதுகாக்க நான் யுத்தம் செய்தேன். ஆனால் என்னுடைய மனைவி மற்றும் கிராம மக்களை என்னால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும் தாக்குதல் நடத்தியவர்கள் பக்கமே நின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கவோ விரட்டியடிக்கவோ போலீஸ் முயற்சிக்கவில்லை என நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவரான அந்த முன்னாள் ராணுவ வீரர் குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications