தேர்தல் தேதி அறிவிப்பு… அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவை தேர்தல் அறிவிப்பையொட்டி அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

I hope this election witnesses a historic turnout: Modi Tweet

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வேறு வேறு கட்சியினராக இருந்தாலும் இந்தியாவின் முன்னேற்றம் என்ற ஒரே இலக்குடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை மக்கள் நிராகரித்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஊழல், குடும்ப அரசியல் மற்றும் முன்னேற்றம் இல்லாத கொள்கை ஆகியவற்றின் மீது கோபம் இருந்தது. இதனால் மக்கள் அந்த ஆட்சியை அகற்றினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், பல ஆண்டுகளாக தேர்தலை ஒழுங்காக ஏற்பாடு செய்வதற்காக, தேர்தல் ஆணையம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இதோ, ஜனநாயகத்தின் திருவிழா என்று தேர்தலை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, 2019 லோக்சபா தேர்தலில் ஒரு வரலாற்றுமிக்க வாக்குப்பதிவு இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+