• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புதிய இந்தியா அமைவதற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பே இந்த பிரம்மாண்ட வெற்றி.. மோடி பேச்சு

|

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக-வின் வெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் வெற்றி என்றார்.

தற்போது நாம் பெற்றுள்ள வெற்றியானது சொந்த வீட்டிற்காக ஏங்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து தந்துள்ள பெரிய வெற்றியின் காரணமாக எனது கடமை மேலும் அதிகரித்துள்ளது என மோடி பேசினார்.

I will submit the election victory at the peoples feet.. Modi speech

மேலும் பேசிய மோடி பிரதமரான முதல் பயணத்திலேயே பல தடைகளை கடந்தேன். ஆனால் ஒருபோதும் தளர்வடையவில்லை. கடந்த 5 வருட ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அதனால் தான் இந்த வெற்றி வசப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த தேர்தல் ரிசல்ட் ரொம்ப ரொம்ப வித்தியாசமானது.. பல வகையில் ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா?

சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே, இந்த முறைதான் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. வருண பகவான் கூட பாஜகவின் வெற்றியை கொண்டாட நம்முன் இணைந்துள்ளார் என வெளியே மழை பெய்ததையும் இணைத்து பேசினார் மோடி.

இந்த தேர்தலில் புதிய இந்தியாவை உருவாக்க பாஜக மக்களிடம் கோரிக்கை விடுத்தது. மகாபாரத்தில் பாண்டவர் பக்கம் கிருஷ்ணர் நின்றது போல, இத்தேர்தலில் மக்கள் எங்கள் பக்கம் நின்றுள்ளனர். இந்த தேர்தலில் மக்களை தவிர வேறு யாரையும் முன்னிலைப்படுத்தவில்லை. எனவே இந்த வெற்றியை மக்களின் காலடியில் சமர்ப்பிப்பதாக கூறினார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் தோளோடு தோள் நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். இது மோடியின் தனிப்பட்ட வெற்றியல்ல. நாட்டின் வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களின் வெற்றி, விவசாயிகளின் வெற்றி, நடுத்தர வர்கத்தினரின் வெற்றி என அடுக்கினார்.

விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

வரும் 2024-ம் ஆண்டிற்குள் நாட்டை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் மற்றும் கனவு. ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டை உயர்த்த முடியும் என்றார் மோடி.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக இன்னும் கடுமையாக உழைப்போம். என்னை புரிந்து கொண்டு நாட்டின் வெற்றிக்காக வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது?

 
 
 
English summary
Narendra Modi spoke among the volunteers at the BJP headquarters following the success of the Lok Sabha elections. Speaking at that time, he said that the success of the BJP's success was the victory of the farmers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X