Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானப்படையின் ஓடுபாதையையே விற்ற தாய் - மகன்.. 28 ஆண்டுகளுக்கு பின் எஃப்ஐஆர்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான ஓடுபாதை அமைக்கப்பட்டு இருந்த இடத்தை அபகரித்து தாயும், மகனும் விற்பனை செய்தனர். அவர்களின் மோசடி 28 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலாமான நிலையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை நிலத்தை தாயும், மகனும் பட்டா போட்டு விற்பனை செய்தது? இப்போது எப்படி சிக்கினர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நம் ஊர்களில் ஒருவரின் நிலத்தை இன்னொருவர் ஆக்கிரமிப்பு செய்வதும், அரசு நிலத்தை ஆட்டையை போட்டு கட்டுமானங்கள் கட்டுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆனால் பஞ்சாப்பில் தாயும், மகனும் சேர்ந்து இந்திய விமானப்படையின் விமான ஓடுதளம் இருந்த நிலத்தையே சுருட்டி பட்டா போட்டு பங்கு வைத்துள்ளனர். இது நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை தான்.

இந்த துணிகர அபகரிப்பு சம்பவம் குறித்த தகவல் வருமாறு: அதாவது பஞ்சாப் மாநிலம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு மிகவும் அருகில் ஃபட்டுவாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நம் நாட்டின் இந்திய விமானப்படைக்கு சொந்தமான நிலம் உள்ளது.

2ம் உலகப்போர் சமயத்தில் கடந்த 1945ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி இந்த இடம் பிரிட்டிஷ்காரர்களால் வாங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இந்த இடம் இந்திய விமானப்படையின் வசம் சென்றது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டது. போர் உருவானது. இதையடுத்து போர் விமானங்கள் அவசர தேவைக்காக விமான ஓடுபாதை அமைக்கப்பட்டது. அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கவும், இங்கிருந்து விண்ணில் செல்லவும் இந்த ஓடுபாதை அமைக்கப்பட்டது.

இந்த ஓடுபாதை மொத்தம் 3 போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையே நடந்த போர், 1965ம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 2வது காஷ்மீர் போர், 1971ம் ஆண்டில் வங்கதேசத்தை உருவாக்க இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போர் உள்ளிட்டவற்றில் இந்த ஓடுபாதை பங்களிப்பு செய்தது. அதன்பிறகு பயன்படுத்தாமல் போனது.

இந்நிலையில் தான் விமானப்படைக்கு சொந்தமான இந்த இடத்தை டம்னிவாலா கிராமத்தை சேர்ந்த உஷா அன்சால்,என்ற பெண் தனது மகன் நவீன் சந்த் உடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளார். இடத்துக்கான ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து அந்த இடத்தை உஷா, நவீன் ஆகியோர் கைப்பற்றினர். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உதவி செய்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை போலியாக உருவாக்கி உள்ளனர்.

அதன்பிறகு 1997 ம் ஆண்டில் இந்த இடத்தை உஷா - நவீன் விற்பனை செய்தனர். சுர்ஜித் கவுர், மன்ஜித் கவுர், முக்தியார் சிங், ஜாகீர் சிங், தாரா சிங், ரமேஷ் காந்த் மற்றும் ராகேஷ் காந்தி ஆகியோரின் பெயர்களுக்கு பத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதனை ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் கண்டுப்பிடித்தார்.

இதுதொடர்பாக அவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு ஹல்வாரா விமான தளத்தின் கமாண்டண்ட் பெரோஸ்பூர் கலெக்டரிடம் புகார் மீது விசாரிக்கும்படி கடிதம் எழுதினார். இதற்கிடையே ஓய்வு வருவாய் அதிகாரி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

அதோடு அந்த நிலத்துக்கான ஒரிஜினல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிலத்தின் உண்மையான உரிமையாளர் பெயர் மதன் மோகல் லால் என்பதும், அவர் கடந்த 1991ம் ஆண்டில் மறைந்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து ஆங்கிலேயர்கள் வசம் சென்றதும், அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் இத்தகைய மோசடி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறிய உயர்நீதிமன்றம் அதன் மீது நடவடிக்கை எடுக்காத பெரோஸ்பூர் கலெக்டரை கண்டித்தது. அதுமட்டுமின்றி புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க பஞ்சாப்பின் விஜிலென்ஸ் தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து விஜிலென்ஸ் தலைமை இயக்குநர் விசாரித்து 4 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த மாதம் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தாய் உஷா, மகன் நவீன் உடன் சேர்ந்து வருவாய் அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களில் இந்திய விமானப்படை நிலத்தை மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 28 ஆண்டுகள் கழித்து உஷா, நவீன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டம் 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 420 (மோசடி செய்தல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்க ஏற்பாடு செய்தல்), 465 (மோசடி), 467 ( உயில் போன்றவற்றை போலியாக மாற்றுதல்), 471 (போலி ஆவணம் அல்லது மின்னணு பதிவேட்டை உண்மையானது போல் பயன்படுத்துதல்) மற்றும் 120B (குற்ற சதி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த நிலம் மத்திய பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+