மத்திய அமைச்சர்களுடன் அவசர அவசரமாக.. தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய ராணுவ விமானம்.. என்ன ஆச்சு?
டெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ராஜஸ்தான் பார்மர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இருந்தனர்.
Recommended Video
போர் அல்லது இயற்கை பேரிடர்கள் ஆகியவை ஏற்படும் சமயங்களில் விமான நிலையங்கள் அல்லது ராணுவ விமான தளங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
அதுபோன்ற சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க சில குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் விமான ஓடுதளங்களாகப் பயன்படுத்துவது குறித்து விமானப் படை கடந்த சில ஆண்டுகளாகவே ஆலோசித்து வந்தது.

தேசிய நெடுஞ்சாலை
இந்நிலையில், இன்று இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் ராஜஸ்தான் பார்மர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. ராணுவ பயிற்சி ட்ரிலின் ஒரு பகுதியாக இந்த விமானம் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது நமது தேசிய நெடுஞ்சாலைகள் எந்த அளவிற்குத் தரத்துடன் அமைந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

மத்திய அமைச்சர்கள்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய விமானப்படை தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவுரியா ஆகியோர் இந்த சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில் இருந்தனர் இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராந்நாத் சிங் தனது ட்விட்டரில், "அனைவருக்கும் வாழ்த்துகள். வழக்கமாக கார்களும்லாரிகளும் செல்லும் இடத்தில், இப்போது இந்த விமானம் தரையிறங்கியுள்ளது. இது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது.

மிகவும் முக்கியமானது
ஏனென்றால் கடந்த 1971இல் ஏற்பட்ட போரின் போது இந்த இடங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின. இது சர்வதேச எல்லை அருகில் உள்ளது. இதுபோன்ற அவசர தரையிறங்கும் அமைப்பு நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்தியா அதன் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எப்போதும் தயாராக உள்ளது என்பதையே இது நிரூபிக்கிறது. போர் ஏற்படும் சமயத்தில் மட்டுமின்றி இயற்கை பேரிடர் ஏற்படும்போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காகவும் ஹெலிபேட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா போன்ற இயற்கை பேரிடர்கள் போரை விட எந்த விதத்திலும் குறைவானதல்ல. போராக இருந்தாலும் சரி, இயற்கை பேரழிவாக இருந்தாலும் இந்தி விமானப் படை எப்போதும் தயாராக இருக்கும்" என்றார்.

ராணுவ விமானங்கள்
சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் நெடுஞ்சாலையில் தரையிறங்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தைத் தொடர்ந்து ஜாகுவார்ஸ் மற்றும் சுகோய் சு -30 எம்.கே.ஐ ஆகிய விமானங்களும் இந்த நெடுஞ்சாலையில் தரையிறங்கி, மீண்டும் புறப்பட்டுச் சென்றன. போர் ஏற்படும் சமயங்களில் விமான படைத்தளங்கள் தான் எதிரிகளின் முதல் குறியாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் இப்படி சாலைகளில் அமைந்திருக்கும் விமான ஓடுதளங்களை நாம் பயன்படுத்தலாம்.

எப்படி செயல்படும்
இந்த சாலைகளில் வழக்கமான காலத்தில் வாகன போக்குவரத்து எப்போதும் போல இருக்கும். ஆனால், போர் ஏற்படும் காலங்களில் வாகன போக்குவரத்து அனைத்தும் சர்வீஸ் சாலைகளுக்கு மாற்றப்படும். அப்போது நெடுஞ்சாலைகள் விமானங்களைத் தரையிறக்க ஓடுதளங்களாகப் பயன்படுத்த முடியும். ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 நெடுஞ்சாலைகள், அவசர தரையிறங்கும் விமான ஓடுபாதைகளாகச் செயல்படலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் ஓடுபாதை
அதில் இன்று விமானம் தரையிறங்கிய பார்மரில் NH-925Aஇன் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுபாதை கொண்டது. முன்னதாக கடந்த 2015இல் மிராஜ் -2000 விமானம் டெல்லி அருகே யமுனா விரைவுச்சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு முதலே ஆக்ரா லக்னோ சாலையில் பல்வேறு ராணுவ விமானங்கள் பயிற்சி டிரில்லின் பகுதியாகத் தரையிறங்கியுள்ளது. அதில் இன்று விமானம் தரையிறங்கிய பார்மரில் NH-925Aஇன் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுபாதை கொண்டது. முன்னதாக கடந்த 2015இல் மிராஜ் -2000 விமானம் டெல்லி அருகே யமுனா விரைவுச்சாலையில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு முதலே ஆக்ரா லக்னோ சாலையில் பல்வேறு ராணுவ விமானங்கள் பயிற்சி டிரில்லின் பகுதியாகத் தரையிறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications