நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்ததற்கு.. பாஜக கூட்டணி ஆதரவாளர்களும் அமோக ஆதரவு.. சி-வோட்டர் பரபர சர்வே
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மா சஸ்பெண்டுக்கு சாதி, மதம் பாகுபாடு இன்றி ஆதரவு தெரிவித்துள்ளது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடந்தது. இதில் இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வன்முறையை ஏற்படுத்தியது. மேலும் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய நுபுர்சர்மாவுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு
இதையடுத்து நுபுர் சர்மா மற்றும் பாஜகவை சேர்ந்த நவீன் ஜிண்டால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே நுபுர் சர்மா விஷயத்தில் கத்தார், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே தனக்கும், தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக நுபுர் சர்மா டெல்லி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே நுபுர்சர்மாவின் சஸ்பெண்ட் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கருத்து கணிப்பு
இந்நிலையில் நுபுர்சர்மா சஸ்பெண்ட் குறித்து IANS-CVoter சார்பில் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. இந்தியா முழுவதும் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பாஜகவின் நடவடிக்கைக்கு பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவானது பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவை எவ்வளவு சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது பற்றிய கருத்து கணிப்பு முடிவுகள் வருமாறு:
Recommended Video

பாஜக கூட்டணி கட்சியினர் ஆதரவு
நுபுர்சர்மாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ததற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 72 சதவீதம் பேரும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 79 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 76 சதவீதம் பேர் அதாவது நான்கு பேரில் 3 பேர் பாஜகவின் நடவடிக்கையை ஆதரித்துள்ளனர்.

பெண்களில் எவ்வளவு பேர்?
பெண்களும் கூட நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை கூறவில்லை. பெண்களை பொறுத்தமட்டில் 77 சதவீதம் பேரும், ஆண்களை பொறத்தமட்டில் 76 சதவீதம் பேரும் நுபுர்சர்மா மீதான நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். தலித் அல்லது பட்டியலிடப்பட்ட மக்களில் 76 சதவீதம் பே பேரும், உயர்வகுப்பினர் என கூறப்படுபவர்களில் 71 சதவீதத்தினரும், மேலும் பாஜகவுக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ள ஓபிசி பிரிவு மக்களில் 71 சதவீதம் பேரும் பாஜகவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் ஆதரவு
மதத்தின் அடிப்படையில் பார்த்தால் நுபுர்சர்மா மீதான பாஜகவின் நடவடிக்கைக்கு சீக்கியர்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் 97.8 சதவீதம் பேரும், அதன்பிறகு முஸ்லிம் மக்களில் 90 சதவீதம் பேரும் பாஜகவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என கருத்து கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications