இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்... ரேப்பிட் ஆன்டிஜன் முறைக்கு.. ஐசிஎம்ஆர் அனுமதி
டெல்லி: ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் (RAT) வீடுகளிலேயே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் புதிய கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனைகளும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20.08 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்
நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மேலும் துல்லியமாகக் கண்டறிய இன்னும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐசிஎம்ஆர் ஒப்புதல்
இது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே இந்த ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் ஒருவருக்கு பாசிடிவ் என்ற முடிவு வந்தால், அவர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவு வந்தால், அவர் உடனடியாக RTPCR பரிசோதனை செய்ய வேண்டும்.

ரேப்பிட் சோதனை கருவிகள்
கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் இதைப் பயன்படுத்தினால் போதும்" எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை CoviSelfTM(PathoCatch) Covid-19 OTC Antigen LF ஆகிய ரேப்பிட் சோதனை கருவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் விளக்கப்பட்டிருக்கும் முறையைப் பின்பற்றி ஒருவர் கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே மேற்கொள்ளலாம்.

எப்படி பரிசோதனை செய்ய வேண்டும்
மேலும், இதற்காகக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தனியாகச் செயலிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செயலிகளிலும் கொரோனா பரிசோதனையை வீடுகளில் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை செய்தவர்கள் ரேப்பிட் சோதனை கருவிகளில் தெரியும் தங்கள் சோதனை முடிவுகளைப் புகைப்படமாக எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புகைப்படங்களும் சோதனை முடிவுகளும் ஐசிஎம்ஆர் சர்வர்களில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications