இந்தியா பல நாடுகளாக உடையும்- 100-வது சுதந்திர தின கொண்டாட்டம் கேள்விக்குறி-ராஜ்யசபாவில் வைகோ சீற்றம்
டெல்லி: நாட்டின் இந்தியா என்ற பெயரை மாற்றுவதற்கு ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்களை சனாதன கும்பல் அச்சுறுத்துகிறது எனவும் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் இன்று வைகோ பேசியதாவது: 1978-ம் ஆண்டில் முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தேன். 4-வது முறையாக தற்போது எம்.பி.யாக இருக்கிறேன். எத்தனையோ நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்தியா என்ற பெயரை பாரத் என மத்திய அரசு மாற்ற முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பாக 'பாரத்' என எழுதப்பட்டிருந்தது. அப்படியானால் பிரதமர் மோடி, 'இந்தியாவின்' பிரதிநிதி இல்லையா? ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இல்லையா? அப்படியானால் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என அழைக்கலாமே?
நீங்கள் சொல்லுகிற பாரத் என்ற பெயர் எங்கிருந்து வந்தது? அந்த சனாதனம், உபநிஷத்துகளில் இருந்து வந்தது.. இந்திய நாட்டை இந்து ராஷ்டிரமாக உருமாற்றுவதற்குதான் பாரத் என்ற பெயரை வைக்கின்றனர்.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.. ஒரு போதும் நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தது கிடையாது; வரவும் முடியாது. குப்தர்கள் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தது கிடையாது; அசோகரின் மெளரியர்கள் தமிழ்நாட்டில் கால் வைத்தது கிடையாது. ஆனால் நாங்கள் கங்கையை வென்றெடுத்தோம்; இமயமலையில் வெற்றி கொடி நாட்டினோம்.
"இந்தியா" என்ற பெயரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? "இந்தியா" என்ற கூட்டணி உருவாகி இருப்பது உங்களை எல்லாம் அச்சுறுத்துகிறது. ஆகையால்தான் "இந்தியா" என்ற பெயரை மாற்றிவிட்டு பாரத் என்ற பெயரை வைக்க முயற்சிக்கின்றனர்.
இந்தியாவில் மதச்சார்பின்மை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். சனாதன கும்பல் இஸ்லாமியர்களை அச்சுறுத்துகிறது. சனாதன சக்திகள்தான், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறு! முஸ்லிம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்கிறது. இந்த நாடு இந்துராஷ்டிரா மக்களுக்கானது என்கின்றனர்.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் சோவியத் யூனியனுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவுக்கும் ஏற்படும்! சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது? இந்தியாவும் பல நாடுகளாக சிதறிப் போகும். ஆகையால்தான் இந்தியாவை ஆகக் குறைந்தபட்சம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என அழைக்க வேண்டும் என்கிறேன். இல்லை என்றால் நூற்றாண்டு சுதந்திர தின விழாவை ஒன்றுபட்ட இந்தியா கொண்டாட முடியாத நிலை உருவாகிவிடும். இவ்வாறு வைகோ பேசினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications