"நீர்வளத்துறை அமைச்சர்" பதவி.. 'நாயுடு', 'கவுடா' யாருக்கு கிடைச்சாலும் தமிழ்நாட்டுக்கு "பேராபத்து"?
டெல்லி: மத்தியில் பாஜக தலைமையில் அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சர் பதவி ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் கர்நாடகாவின் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கான பாலாறு, காவிரி நீர் உரிமைகள் ஒட்டுமொத்தமாக காவு கொள்ளப்படும் பேராபத்து காத்திருக்கிறது.
மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் 16 இடங்களில் வென்ற ஆந்திராவின் தெலுங்குதேசம், 2 இடங்களில் வென்ற கர்நாடகாவின் ஜேடிஎஸ் , 12 இடங்களில் வென்ற பீகாரின் ஜேடியூ உள்ளிட்டவைகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சியை நரேந்திர மோடி அமைக்க இருக்கிறார்.

அமைச்சர் பதவி பேரங்கள்: பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இடம் பெறும் கட்சிகள் தங்களுக்கான வலுவான துறைகளை ஒதுக்க இப்போதே பேரத்தைத் தொடங்கிவிட்டன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியானது லோக்சபா சபாநாயகர் பதவி மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறதாம். நிதிஷ்குமாரின் ஜேடியூ, வேளாண்துறை அமைச்சர் பதவி உள்ளிட்ட 4 கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்கிறதாம். கர்நாடகாவில் மண்டியா, கோலார் ஆகிய 2 தொகுதிகளில் வென்ற குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் நீர்வளத்துறை அல்லது வேளாண்துறை அமைச்சர் பதவியைக் கேட்கிறதாம்.
என்னவாகுமோ பாலாறு உரிமை?: ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது கர்நாடகாவில் ஜேடிஎஸ் - பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவரோ மத்திய நீர்வளத்துறை அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டின் பாலாறு, காவிரி நீர் உரிமைகள் அடியோடு பறிபோய்விடும் என்கிற பேரபாயம் எழுந்துள்ளது. ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டி வைத்திருக்கிறது ஆந்திரா. தற்போது பாலாற்றின் வெள்ளநீர் வழிந்தோடும் வடிகால் நிலமாக மட்டுமே தமிழ்நாடு உள்ளது. இதனால் பாலாறு பாசன விவசாயமே பாழ்பட்டுப் போய்விட்டது. ஆந்திராவை சேர்ந்த ஒருவர் நீர்வளத்துறை அமைச்சரானால் எஞ்சிய இடங்களிலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பாலாறு இனி தமிழ்நாட்டுக்கு இல்லை என்கிற நிலைமை உருவாகிவிடும்.
பறிபோகுமோ காவிரி நதிநீர் உரிமை?: கர்நாடகாவில் மண்டியாவில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் ஜேடிஎஸ் தலைவரான முன்னாள் முதல்வரான குமாரசாமி. மண்டியா, மைசூர் உள்ளிட்ட ஒக்கலிகா கவுடா ஜாதி பெல்ட்டில் ஏற்கனவே ஜேடிஎஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது. காவிரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடாக்களிடம் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே நீர்பாசனத்துறை அல்லது வேளாண் துறையை குமாரசாமி கேட்டு வருகிறாராம். குமாரசாமி வசம் மட்டும் மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போய்விட்டால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் உடனடியாக அணையை கட்டி முடித்துவிடும் கர்நாடகா. தமிழ்நாடு போராடி பெற்ற காவிரி நீர் உரிமையை இலகுவாக கர்நாடகா கபளீகரம் செய்யும் நிலைமை உருவாகும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது, அத்துடன் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிடக் கூடிய சாத்தியங்களும் கேள்விக்குறியாகிவிடும். இதனால்தான் 'நாயுடு' (தெலுங்குதேசம்), 'கவுடா' (ஜேடிஎஸ்)-க்களுக்கு மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்தாக முடியும்.
பழிவாங்குமா பாஜக?: மாநிலங்களிடையே நதிநீர் பிரச்சனை உள்ள நிலையில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாத தமிழ்நாட்டுக்கு பாதகம் செய்ய பாஜக முடிவெடுத்தால் ஆந்திரா- கர்நாடகாவுக்குதான் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போகும் என்கிற சூழ்நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications