இந்தியா - பாகிஸ்தான் போர் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? 2ம் உலகப்போருடன் ஒப்பீடு.. ஷாக் தகவல்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் பட்சத்தில் அது 2ம் உலகப்போருக்கு பிறகு வரும் பெரிய போராக மாறும். இதற்க இருநாடுகளிடமும் அணுஆயுதம் இருப்பதும், மொத்தம் 20 லட்சம் வீரர்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வதும் தான் முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு முதல் ட்ரோன், ஏவுகணை மூலம் பாகிஸ்தான் நம்மை தாக்க முயற்சிக்கிறது. மறுபுறம் அந்த தாக்குதலை முறியடித்து பதிலடி கொடுத்து வருகிறோம்.

அதன்படி இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் நம்மிடம் மீண்டும் மல்லுக்கட்ட தொடங்கி உள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்னும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் அது 2ம் உலகப்போருக்கு பிறகு நடக்கும் மோசமாக போராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945ம் ஆண்டு வரை நடந்தது. இந்த உலகப்போரில் பல நாடுகள் பங்கேற்றனர். இந்த போர் 6 ஆண்டுகள் நடந்ததால் படை வீரர்கள் எண்ணிக்கை என்பது கோடியை தொட்டது. இப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் 2ம் உலகப்போருக்கு பிறகு அதிகப்படியான வீரர்கள் மோதிக்கொள்ளும் போராக இது அமையும்.
ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் என்று 2 நாடுகளையும் சேர்த்தால் போரில் தொடக்கத்திலேயே மொத்தம் 20 லட்சம் வீரர்கள் வரை சண்டையிடுவார்கள். இதில் அதிகமான வீரர்கள் இந்தியாவின் பக்கம் இருப்பார்கள். இந்தியாவில் தற்போது ராணுவத்தில் 12 லட்சத்து 37 ஆயிரம் பேர் உள்ளனர். கடற்படையில் 75,500 ஆயிரம் பேரும், விமானப்படையில் 1.50 லட்சம் பேரும் உள்ளனர். மொத்தமாக பார்த்தால் இந்தியா சார்பில் மொத்தம் 14.7 லட்சம் பேர் போரிடுவார்கள். மறுபுறம் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ராணுவத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர், விமானப்படையில் 70 ஆயிரம் பேர், கடற்படையில் 30 ஆயிரம் பேர் என்று மொத்தம் 7 லட்சம் பேர் உள்ளனர். இருநாடுகளின் வீரர்களின் மொத்த எண்ணிக்கை என்பது 20 லட்சத்தை கடந்துள்ளது.
அதேபோல் இந்தியாவிடம் 4,201 டேங்குகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 2,627 மட்டுமே உள்ளது. நம் நாட்டிடம் 2,229 விமானங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 1,399 விமானங்கள் மட்டுமே உள்ளது. மேலும் இந்த போர் என்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால் உலகளவில் 4வது பெரிய ராணுவமாக இந்தியா உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இந்தியா மொத்தம் 86 பில்லியன் அமெரிக்க டாலரை ராணுவத்துக்கு செலவிட்டது. இதன்மூலம் ஆசிய நாடுகளில் ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மறுபுறம் உலகில் 12வது பெரிய ராணுவமாக பாகிஸ்தான் உள்ளது. இருநாடுகளிடமும் அணுஆயுதம் என்பது உள்ளது. இதனால் அணுஆயுதம் பயன்படுத்தும் அச்சம் கூட உள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டிடம் 172 அணுஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 170 அணுஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திங் டேங்க் ஆர்ம்ஸ் கண்ட்ரோல் அசோசியேஷன் கூறியுள்ளது. அதேபோல் நம் நாட்டிடம் அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணைகளை இருநாடுகளும் வைத்துள்ளன. இதனால் இருநாடுகள் இடையே போர் வந்தால் 2ம் உலகப்போருக்கு பிறகு பெரிய போராக மாறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications