அக்னிபாத்!ராணுவத்தில் சிப்பாய் ஆக விரும்பினால் அக்னிபாத்தில் விண்ணப்பிக்காதீங்க!ப சிதம்பரம் ‛சுளீர்’
டெல்லி: ‛‛ஓட்டுநர், சலவை செய்தல், முடித்திருத்துதல், செக்யூரிட்டி பணி, பக்கோடா தயாரிப்புக்கான பயிற்சி பயிற்சி பெற விரும்பினால் அக்னிபா வீரர்களாக சேருங்கள். சிப்பாய் ஆக விரும்பினால் அக்னி வீரராக விண்ணப்பிக்க வேண்டாம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முப்படையில் அறிமுகம் ஆக உள்ள அக்னிபாத் திட்டம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில் அந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் வயது தளர்வு, மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் ஒதுக்கீடு வழங்கினாலும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.

முடிவுக்கு வராத போராட்டம்
இதனால் தான் இன்றும் நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பந்த் போராட்டம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இளைஞர்கள் டெல்லி சிங்கு எல்லையில் குவிந்துள்ளனர். இதனால் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்துக்க வழிவகுத்த விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தலைவர்கள் சர்ச்சை
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவிப்பது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ‛‛அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு எலக்ட்ரிஷியன், டிரைவர், முடி திருத்துதல் உள்ளிட்ட வேகைளுக்கான திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். 4 ஆண்டு சேவையை முடித்து பிறகு இந்த திறன்கள் பயனுள்ளதாக இருக்கும்'' என தெரிவித்து இருந்தார். இதேபோல் பாஜக தேசிய பொதுச்செயலாளர் விஜய் வர்கியா, ‛‛பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி பணிக்கு ஆள் எடுக்க விரும்பினால் நான் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்'' என்றார்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இந்த கருத்துகளுக்கு காங்கிரஸ், சிவசேனா, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஆம்ஆத்மி உள்பட பல கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை அவமானப்படுத்துவதை பாஜக தலைவர்கள் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர்.
Recommended Video

ப சிதம்பரம் சொல்வது என்ன?
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நீங்கள்(இளைஞர்கள்) ஓட்டுநர், சலவை செய்பவர் அல்லது முடிதிருத்தும் பயிற்சி பெற விரும்பினால் அக்னிவீரராகுங்கள். மேலும் செக்யூரிட்டி பணி, பக்கோடா தயாரிக்க கற்றுக்கொள்ள விரும்பினால் அக்னிவீரராகுங்கள். நீங்கள் சிப்பாய் ஆக விரும்பினால் விண்ணப்பிக்க வேண்டாம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications