காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. அசோக் கெலாட்டை ஓவர்டேக் செய்த சசி தரூர்! அடுத்து என்ன நடக்கும்?
டெல்லி: அடுத்த மாதம் நடைபெறும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் மற்றும் அசோக் கெலாட் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகிய பின்னர், காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே தலைவர் பதவி காலியாகவே உள்ளது.
சோனியா காந்தி காங்கிரசின் இடைக்கால தலைவராகவே இருந்து வருகிறார். உடல்நிலை காரணமாக அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

காங்கிரஸ்
இதையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்பதில் ராகுல் காந்தி மிக உறுதியாக உள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு இன்று தொடங்கி உள்ளது. இதையடுத்து சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

சசி தரூர்
அசோக் கெலாட் மிக விரைவில் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அசோக் கெலாட்டிற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இன்று தலைவர் பதவிக்குப் போட்டியிடப் படிவத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் முதல் நபராக என்ற பெயரை அவர் பெற்று உள்ளார். ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கட்சி செயல்பாடுகள் குறித்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி வந்தனர்.

ஜி-23
இந்த ஜி-23 தலைவர்களில் ஒருவர் தான் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சசி தரூர் டெல்லி சென்று கடந்த அக்.17ஆம் சோனியா காந்தியை நேரில் சந்தித்து இருந்தார். இருந்த போதிலும், அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தியின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்தத் தேர்தலில் சசி தரூர் என்ன திட்டத்துடன் களமிறங்க உள்ளார் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

சோனியா காந்தி
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கட்சித் தலைவர் பதவி முதலில் சோனியா காந்தியிடம் இருந்தது. 2017இல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். இருப்பினும் 2019இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்ததால் அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், மீண்டும் சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாகப் பல முக்கிய தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூட காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகளையே குற்றஞ்சாட்டி இருந்தார், அவர் வெளியேறிய பின்னர், காஷ்மீர் காங்கிரஸில் இருந்து பல முக்கிய தலைவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

நேரு குடும்பம்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக் கடைசியாக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் அக்கட்சிக்குத் தலைவராக வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒருவர் அக்கட்சிக்குத் தலைமை ஏற்றது 1998இல் தான். அப்போது சீதாராம் கேசரி இரு ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.












Click it and Unblock the Notifications