இந்தியா வேண்டவே வேண்டாம்.. 7 ஆண்டில் குடியுரிமையை துறந்த 9.24 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?
டெல்லி: தனிப்பட்ட காரணங்களால் கடந்த 7 ஆண்டில் மட்டும் இந்தியாவின் குடியுரிமையை துறந்து 9.24 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2021ல் மட்டும் 1.6 லட்சம் இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வசிக்க துவங்குகின்றனர். இவ்வாறு வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் நபர்கள் இந்திய குடியுரிமையை கைவிடுவார்கள்.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

120 நாடுகளில் குடியுரிமை
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு கொடுத்துள்ளனர். இவர்கள் 120க்கும் அதிகமான நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

எந்த நாடுகளில் எவ்வளவு பேர்?
இதில் அதிகபட்சமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலியாவிலும், 35 ஆயிரத்து 435 பேர் பிரிட்டனிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர 12,131 பேர் இத்தாலியிலும், 8,882 பேர் நியூசிலாந்திலும், 7,046 பேர் சிங்கப்பூரிலும், 6,690 பேர் ஜெர்மனியிலும், 3,54 பேர் ஸ்வீடனிம், 48 பேர் பாகிஸ்தானிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர பிற நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

7 ஆண்டில் எவ்வளவு?
குறிப்பாக 2015 முதல் 2021 வரை கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 9.24 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021 ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 1.6 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமானவர்கள் குடியுரிமையை துறந்த பட்டியலில் 2021 அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக கடந்த 2019ல் 1 லட்சத்து 44 ஆயிரத்து 017 பேர் எனவும், 2020ல் 85 ஆயிரத்து 256 பேர் எனவும் இருந்தது.

காரணம் என்ன?
மேலும் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் பற்றி கேட்டதற்கு அதற்கான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும் சிறந்த வாழ்க்கை முறை, காலநிலை, கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வணிகத்துக்கான எளிய நடைமுறை உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications