டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு... 200 பேர் பாதிப்பு - 77 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 77 பேர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் தொற்றில் இருந்து 77 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த ஆண்டு இரண்டாவது அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் புதிய வைரஸ் பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 ஓமிக்ரான்.. மக்களே உஷார்.. எலும்பு வங்கியை துவங்கி வைத்து.. மா.சுப்பிரமணியன் சொன்ன ஓமிக்ரான்.. மக்களே உஷார்.. எலும்பு வங்கியை துவங்கி வைத்து.. மா.சுப்பிரமணியன் சொன்ன

ஓமிக்ரான் பரவல் வேகம்

ஓமிக்ரான் பரவல் வேகம்

நோய் எதிர்ப்பு சக்தியை மீறி வேகமாக பரவக் கூடிய இந்த வைரஸ் தொற்று டிசம்பர் தொடக்கத்தில் பிரிட்டனில் ஓமிக்ரானால் ஒருவர் உயிரிழந்தார் அங்கு இதுவரை 12 பேர் ஓமிக்ரானால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் ஒருவர் ஓமிக்ரானால் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வேகமாக பரவல்

வேகமாக பரவல்

இந்த நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் உறுதி

ஓமிக்ரான் உறுதி

அடுத்தபடியாக தெலுங்கானாவில் 20 பேருக்கும் கர்நாடகாவில் 19 பேருக்கும் ராஜஸ்தானில் 18 பேருக்கும் கேரளாவில் 15 பேருக்கும் குஜராத்தில் 14 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

ஓமிக்ரான் ஒருவருக்கு பாதிப்பு

ஓமிக்ரான் ஒருவருக்கு பாதிப்பு

உத்தர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 2 பேருக்கும் ஆந்திர பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 1 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லை

உயிரிழப்பு இல்லை

ஓமிக்ரான் பாதிப்பிற்கு ஆளான 200 பேர்களில், டெல்லியில் 12 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் மகாராஷ்டிராவில் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் 15, ராஜஸ்தானில் 18, உத்தரப் பிரதேசத்தில் 2, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் 1 என 77 பேர் ஓமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றால் உயிரிழப்பு இதுவரை ஏற்படவில்லை.

Recommended Video

    வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்… 27.57 கோடியை தாண்டிய பாசிட்டிவ் கேஸ்கள்!
    தடுப்பூசி அவசியம்

    தடுப்பூசி அவசியம்

    இந்தியாவில் தினசரியும் 7500 வரை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்டாவுக்கு பதிலாக ஓமிக்ரான் பாதிப்பு வரும் போது இந்த எண்ணிக்கை உயர போவது உறுதி என நிபுணர்கள் கூறியுள்ளனர். மக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் சானிடைசர் உபயோகம் ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    English summary
    The number of people infected with the Omigron virus in India has increased to 200. Maharashtra and Delhi have the highest number of confirmed cases of Omigron at 54 each. 77 people have recovered from the Omigran infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X