மெகா செக்.. பிரதமர் மோடிக்கு வேறு வழியே இல்ல! நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இந்தியா கூட்டணி கணக்கு
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருப்பது ஏன்? பாஜகவிற்கு போதிய எம்பிக்கள் ஆதரவு இருந்தும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இந்தியா கூட்டணி சாதிக்க நினைப்பது என்ன? என்பதை பார்ப்போம்.
கடந்த வாரம் வியாழக்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளி துமளியுடன் காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிலையில், அவர் மக்களவைக்கு உள்ளே எதிர்க்கட்சி எம்பிக்கள் முன் பேச வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் எதிர்பார்பார்ப்பு.

இதனை வலியுறுத்தி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி இருக்கின்றன. பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடினாலும் அமளி தொடர்ந்து வருகின்றன. அவையில் விவாதிக்க அனுமதியளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தும் எதிர்கட்சிகள் கேட்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் எல்லா அமர்வுகளிலும் கலந்துகொள்வது இல்லை. இந்த நிலையில் இன்று காலை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர்.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்து உள்ளன. 50க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நாள், நேரத்தை அறிவிப்பதாக ஓம் பிர்லா அறிவித்துள்ளார். 545 இடங்களில் பெரும்பான்மையாக 301 இடங்களை பாஜக வைத்திருக்கிறது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை விட பாஜகவின் பலம் 2 மடங்கு அதிகம்.
இந்த பலத்தை வைத்துக்கொண்டு ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், அதையும் மீறி இதை கொண்டு செல்வதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது பல்வேறு அமளிகள், போராட்டங்களுக்கு பிறகும் மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் பேசாமல் இருக்கும் பிரதமர் மோடியை அது பற்றி பேச வைக்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை நோக்கம்.
காரணம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்போது ஆளும் கட்சி தரப்பில் பேச வேண்டும். அந்த வகையில் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி இது பற்றி மக்களவையில் பேசுவார் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை. இது அல்லாமல் இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமாக மணிப்பூர் விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.
மேலும் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் சென்றடையும் என்பதே அவர்களின் நம்பிக்கை. எனவேதான் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் என்று கட்சி பெயர்களை குறிப்பிடாமல் இந்தியா என்று பதாகைகளில் குறிப்பிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "கெளரவ் கோகோய் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, மக்களவை விவாதத்திற்கு ஏற்றது. மணிப்பூர் பற்றி விவாதிக்க மறுக்கும் மோடியை அவைக்கு வரவைக்க வேண்டும். எண்ணிக்கை எல்லோருக்கும் தெரியும். ஆனால் தேசத்திற்கு தெரிய வேண்டியது உண்மைகள். அதற்கான முயற்சியே இது." என்று தெரிவித்து உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications