ஆளுக்கு ஒரு திசையில் முட்டுக்கட்டை..அம்போவென கைவிடப்பட்ட "இந்தியா" கூட்டணியின் நாளைய ஆலோசனை கூட்டம்!
டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி "இந்தியா" கூட்டணியை உருவாக்கின. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இந்த கூட்டணியை உருவாக்கியதில் முதன்மை பங்கு வகித்தனர்.

பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் அடுத்தடுத்து இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்றது. "இந்தியா" என கூட்டணிக்கு பெயர் வைத்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை கூட நடத்த தொடங்கினர். ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டு மொத்த கட்சிகளும் "இந்தியா" கூட்டணியை மறந்துவிட்டனர். இது "இந்தியா" கூட்டணி தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திடீரென "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார். ஆனால் இந்த முறை "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் அப்படி ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதைவிட "இந்தியா" கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை உருவாக்கிவிட்டது. டெல்லி ஆலோசனைக் கூட்டம் குறித்து எனக்கு தகவலே தெரியாது என்றார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. நான் கூட்டத்துக்கே போகலை என்றார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இதேபோல உபி எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும் நாளைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
இந்த 'அபாயகரமான' சூழலில் இந்தியா கூட்டணி கூட்டத்தை நடத்தும் முடிவையே கைவிட்டுவிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. டெல்லியில் நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணிக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிசம்பர் 18-ந் தேதி "இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications