அதானி ஊழலில் மோடி 'மவுனம்' ஏன்? நாடாளுமன்றத்தில் 3-வது நாளாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
டெல்லி: அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 3-வது நாளாகப் போராட்டம் நடத்தினர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிடோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அதானி ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் அதானி ஊழல் விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் மசூதி விவகாரம், தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. இரு சபைகளிலும் கடும் அமளிக்கு இடையே அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2 நாட்களாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதானி ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார்? என்றும் அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாகவும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றுதான்; அதானி விவகாரத்தில் மோடி ஏன் மவுனம் காக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications