மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்!
டெல்லி: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல், வீடுகள் கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது என்றும், தமிழ், தெலுங்கு உள்பட 16 மொழிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நம் நாட்டில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது. அதாவது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 7 கணக்கெடுப்புகள் நடந்து இருக்கின்றன. தற்போது 8-வது கணக்கெடுப்பு நடக்க இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டே இந்த கணக்கெடுப்பு நடந்து இருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

நாளை முதல் தொடக்கம்
நம் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அதன்படி 8-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து தான் வரும் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவையில் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாளை தொடங்குகிறது.
டிஜிட்டல் முறையிலும் பூர்த்தி செய்யலாம்
முதல் முறையாக நடப்பு ஆண்டில் டிஜிட்டல் முறையிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வசதியினையும் அதாவது செயலி மூலமாக நாம் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். மொத்தம் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது நடைபெற இருக்கிறது.
முதற்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல், வீடுகள் கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. தமிழ், தெலுங்கு உள்பட 16 மொழிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று நாட்டின் பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருதுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்க திட்டம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள், டெல்லி மாநகரப்பகுதி மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் போர்டு, கோவா, கர்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் வருகிற 15ஆம் தேதி வரை சுய விவர கணக்கெடுப்பும், ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
இதேபோன்று ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் புதுவையில் மே மாதம் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சுயவிவரக் கணக்கெடுப்பும், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்புக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் மொத்தம் 31 லட்சம் பணியாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.
ஆவணங்கள் கொடுக்க வேண்டுமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக எந்த ஒரு ஆவணங்களையும் கொடுக்க தேவையில்லை. சுயவிவர கணக்கெடுப்புக்காக, பதிலளிப்பவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் பிற அடிப்படை விவரங்களைப் பயன்படுத்தி சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழைந்து, தங்களுக்கு வசதியான நேரத்தில் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
இதனை வெற்றிகரமாக சமர்பித்தவுடன், ஒரு தனித்துவமான சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். அதனை, களப்பயணத்தின்போது கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எப்போது?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பானது வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. அதாவது ஜூலை 17 முதல் தொடங்குகின்றன. ஜூலை 17 முதல் 31 ஆம் தேதி வரை முதல் கட்டமாக பொதுமக்கள் இணையதளத்தில் தாமாகவே தகவல்களைப் பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications