எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா அதிகாரிகள் இன்று மீண்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா அதிகாரிகள் இன்று வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளதாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

India China Senior diplomats to hold talks again

சீனா தரப்பில் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து எல்லை பதற்றத்தைத் தொடர்ந்து இருநாடுகளின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று இருநாட்டு அதிகாரிகளும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலாளர் நவீன் ஶ்ரீவத்சவா தலைமையிலான இந்திய குழு இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக எல்லை பிரச்சனைகள் தொடர்பான செயலாளர் ஹாங் லியாங் தலைமையிலான குழு இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+