இஸ்லாமாபாத்தில் மசூதியில் பயங்கரவாத தாக்குதல்! தீவிரவாதிகளுக்கு இந்தியா கண்டனம்!
டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைத் தாக்குதலை இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இரு நாடுகளும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் டவுன் பகுதியில் உள்ள இமாம்பர்கா காதிஜா-துல்-குப்ரா என்ற ஷியா முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தில் நேற்று தொழுகையின்போது நடந்த இத்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 169 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, "இஸ்லாமாபாத் மசூதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு கண்டிக்கத்தக்கது. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கு இந்தியா தனது இரங்கலைத் தெரிவிக்கிறது" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப்பின் வெளிநாட்டு ஊடகப் பேச்சாளர் மொஷரப் ஜைதி, "இந்தியாவால் திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வே இது" என்று குற்றம் சாட்டினார். மேலும், "இந்தியாவின் பயங்கரவாத முகவர்கள் பொருளாதார மீட்சியைத் தடுக்கவோ, பாகிஸ்தானியர்களின் இதயங்களைப் பிளவுபடுத்தவோ அல்லது பாகிஸ்தானின் வளர்ச்சியை குறைக்கவோ மாட்டார்கள்" என்றும் x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனது பதிவில், பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியவரை எதிர்க்கொண்ட போது, அவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வழிபாட்டாளர்களின் கடைசி வரிசையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாகக் குறிப்பிட்டார். இத்தாக்குதலில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. "இந்தியா இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டையும் நிராகரிக்கிறது, இது ஆதாரமற்றது மட்டுமல்ல, அர்த்தமற்றதும்" என்று இந்தியா தெரிவித்தது.
மேலும் பேசிய இந்திய வெளியுறவுத்துறை, "பாகிஸ்தான் மற்றவர்களைக் குறை கூறி தன்னையே ஏமாற்றுவது துரதிர்ஷ்டவசமானது" என்று விமர்சித்தது. ஆப்கானிஸ்தானும் இத்தற்கொலைத் தாக்குதலைக் கண்டித்ததுடன், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது.
"ஆப்கானிஸ்தான் அரசு இஸ்லாமிய விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவி மக்களைக் கொல்லவோ, காயப்படுத்தவோ ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை" என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் தனது 'எக்ஸ்' தளத்தில் உறுதிபடத் தெரிவித்தது.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications