இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா 1,79,723 பேருக்கு தொற்று உறுதி - 4,033 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியா முழுவதும் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் 46,569 பேர் குணமடைந்துள்ளனர். 7,23,619 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 லட்சம் பேரை தொடப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 46,569 பேர் குணமடைந்துள்ளனர். 7,23,619 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் வரை 10 ஆயிரமாக இருந்த நிலையில் 10 நாட்களுக்குள்ளாக மள மள வென அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலையின் வேகம் மிகத்தீவிரமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன் தினம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் தொற்றினால் பாதிக்கப்ட்டனர்.

புதிய தொற்று உறுதி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 12 சதவிகிதம் அதிகமாகும். நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,57,07,727 ஆக அதிகரித்துள்ளது.

7,23,619 பேர் சிகிச்சை
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46, 569 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,45,00,172 அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7,23,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி நேர்மறை விகிதம் 13.29 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 7.92 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4,83,936 பேர் உயிரிழப்பு
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,936 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 151.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video

ஓமிக்ரான் பாதிப்பு 4 ஆயிரம்
நாடு முழுவதும் 4,033 பேர் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,216 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 529 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் 513 பேர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications