படம் காட்டிய பாக்., சீனுக்குள் வராத சீனா.. பாய்ச்சலை தொடங்கியது பாதுகாப்பு துறை! இஸ்ரோவுக்கு உத்தரவு
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த உரசல்கள் காரணமாக, இஸ்ரோ-தனியார் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் உளவு செயற்கைக்கோள்களை சீக்கிரம் தயாரித்து முடிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
ஹைதராபாத்தை சேர்ந்த அனந்த் டெக்னாலஜிஸ், பெங்களூரை சேர்ந்த சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் என மூன்று தனியார் நிறுவனங்கள் உளவு செயற்கைக்கோள்களை தயாரிக்கும் பணியில் இஸ்ரோவுடன் இணைந்துள்ளன.

வேலையை வேகமாக்குங்கள்
இந்நிறுவனங்களுக்கு 4 ஆண்டுகள் காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவ்வப்போது, 'சீக்கிரமாக கொடுங்கள்' என்று மென்மையான உத்தரவுகளை பாதுகாப்புதுறை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்தியா-பாகிஸ்தான் உரசல் ஏற்பட்டிருப்பதால், செயற்கைக்கோள் தயாரிப்பை வேகப்படுத்த வேண்டும் என்று கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2028 வரை இந்நிறுவனங்களுக்கு டைம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 2026க்குள் திட்டத்தை முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளின் உதவி
உளவு விஷயத்தில் நாம் இப்போது வரை வெளிநாடுகளில் செயற்கைக்கோள்களைதான் சார்ந்திருக்கிறோம். இது எப்போது இருந்தாலும் நமக்கு ஆபத்துதான். எனவே சொந்தமாக உளவு செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என்று பாதுகாப்புத்துறை திட்டமிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7-9 வரை டெல்லியில் பாதுகாப்பு செயற்கைக்கோள்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவம் சார்ந்த விண்வெளி விவகாரத்திற்கு 3 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தனியார் நிறுவனங்கள்
இந்த திட்டத்தின்படி மொத்தம் 52 செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படும். மேற்குறிப்பிட்ட 3 தனியார் நிறுவனங்கள் 31 செயற்கைக்கோள்களையும், மீதமுள்ளதை இஸ்ரோவும் உற்பத்தி செய்யும். இதில் மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் கடந்த காலங்களில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றன. குறிப்பாக சந்திரயான்-3 திட்டத்தில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது.
அதானியின் நிறுவனம்
முன்னாள் இஸ்ரோ நிர்வாகியான சுப்பா ராவ் பவுலூரிதான் அனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர். அப்பாராவ் மல்லவரபு என்பவர் சென்டம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். மூன்றாவதாக இருக்கும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை கடந்த 2019ம் ஆண்டு அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கையகப்படுத்தியது என்பது கவனிக்கத்ததக்கது.
ஏன் தேவை?
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி, பாகிஸ்தானுடன் துணை நிற்போம் என்று சீனா கூறியிருப்பது எல்லாம் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் சீன உதவியுடன் பாகிஸ்தான் மீண்டும் பதில் தாக்குதலை நடத்தலாம். இதற்கெல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனில், நமக்கு என தனியாக உளவு செயற்கைக்கோள்கள் தேவை. இதன் மூலம் எல்லையில் பக்கத்து நாடுகளின் நடவடிக்கையை துல்லியமாக தெரிந்துக்கொள்ள முடியும்.
சீனாவின் செயற்கைக்கோள்
சீனாவிடம் குறைந்தபட்சம் 245 உளவு செயற்கைக்கோள்கள் இருக்கலாம் என்று அமெரிக்கா கணித்திருக்கிறது. மட்டுமல்லாது விண்வெளியிலிருந்து அதாவது 100 கி.மீ உயரத்திலிருந்து பூமியில் உள்ள மனிதர்களின் முகத்தை துல்லியமாக படம் பிடிக்கும் லேசர்-இமேஜிங் தொழில்நுட்பம் கொண்ட புதிய அதிநவீன செயற்கைக்கோள்களையும் உருவாக்கியுள்ளனர்.
இப்படி இருக்கும்போது நாம் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும்? எனவேதான் உளவு செயற்கைக்கோள்களை சீக்கிரமாக ரெடி செய்ய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி 2026ம் ஆண்டு இறுதிக்குள் உளவு செயற்கைக்கோள்களை நாம் ஏவுவோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications