டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆதரவு தொடரும், ஆனால்..!" இலங்கை விவகாரத்தில் மவுனம் கலைத்த மத்திய அரசு.. முக்கிய விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் வன்முறை தொடரும் நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த சில காலமாகவே பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. நிலைமையை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் தரவில்லை.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

இதன் காரணமாக இலங்கை மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே, இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவிறது.

 ராஜினாமா

ராஜினாமா

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறங்கினர். முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ச பிடிவாதம் பிடித்தார். இருப்பினும், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இருந்த போதிலும், அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.

 இந்தியா கருத்து

இந்தியா கருத்து

இந்தச் சூழலில் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் குறித்தும் அங்கு ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் மத்திய அரசு முதல்முறையாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இலங்கை மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா முடிவு எடுக்கும் என்று கூறி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜபக்ச அரசின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை, அதேபோல இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து பொருளாதார உதவிகளைச் செய்யும் என்றும் அதேநேரம் அரசியல் ரீதியிலான ஆதரவை வழங்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 எதற்கு முன்னுரிமை

எதற்கு முன்னுரிமை

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "அண்டை நாடான இலங்கை உடன் இந்தியா நெருக்கமான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ரீதியிலான மீட்டெடுப்பிற்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது. இலங்கை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

 உதவிகள்

உதவிகள்

கடந்த சில மாதங்களாகவே இலங்கைக்கு இந்தியா செய்துள்ள உதவிகளை விவரித்த அவர், "3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க இந்திய மக்கள் உதவி வழங்கியுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யக் கடன், கடனை செலுத்தும் காலம் நீட்டிப்பு என மொத்தம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது.

 முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் கூட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் அரிசி மற்றும் பிற பொருட்களையும் அனுப்பியுள்ளன. உலக வங்கியின் உதவி உடன் இலங்கைக்கு உதவுவதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது, இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரியை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியத்தின் குழு ஒன்று இப்போது கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் நிதி உதவி திட்டம் குறித்தும், அதற்கு இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்திருத்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று, பொருளாதார வீழ்ச்சி மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

 அரசியல் நிலை

அரசியல் நிலை

இதனால் விவசாயம், ஏற்றுமதி மற்றும் சுற்றுலா என இலங்கையின் அனைத்து முக்கிய துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை நாட்டால் கடனை தக்க நேரத்தில் திரும்பச் செலுத்த முடியாமல் போனது. இப்போது இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தான் காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது,

Recommended Video

    India-வில் Srilanka அரசியல்வாதிகள் தஞ்சம்? | உண்மை என்ன? | Oneindia Tamil
     உதவி இல்லை

    உதவி இல்லை

    அதேநேரம் அரசியல் ரீதியாக எவ்வித ஆதரவும் கொடுக்க முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாகவே உள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அங்கு அரசியல் சூழல் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு உதவுவதே அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்று கூறினார். மேலும், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த துயர நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.

    English summary
    MEA statement supports democratic processes, people’s welfare, but makes no mention of Rajapaksas: (இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு) Central govt's reaction on Sri Lankan political situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X