தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு- காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா செம பதிலடி
டெல்லி: தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
மாலத்தீவில் தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்கம் குறித்து நேற்று பேசினார்.

இன்று இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பியதை கடுமையாக எதிர்க்கிறோம்.
தெற்காசியாவுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது எல்லை கடந்த பயங்கரவாதம். இப்பிராந்திய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இது இருந்து வருகிறது என்றார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இம்மாநாட்டில் இந்திய குழு பங்கேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications