அடுத்த 5 வருடங்களில் பாருங்க.. இந்தியா எங்கேயோ போகப்போகுது.. சுதந்திர தின உரையில் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இணையற்றதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது அது வளர்ந்த நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

Happy Independence Day Respect to soldiers Jaihind Prime Minister Modi cheers

சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்! என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10 ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேசினார். துடிப்பான எல்லை கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த எண்ணத்தை மாற்றினோம். அவை நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல. எல்லையில் நீங்கள் பார்ப்பது எனது நாட்டிலேயே முதல் கிராமம். இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள் இந்த எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த 600 பிரதான்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர்கள் இங்கு செங்கோட்டைக்கு வந்துள்ளனர் என்று பெருமிதத்துடன் குறிப்பட்டார்.

பிரதமர் மோடி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் விஷயங்களில் ஒன்று பெண்கள் தலைமையிலான வளர்ச்சி. இன்று, சிவில் ஏவியேஷன் துறையில் அதிக எண்ணிக்கையிலான விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் சொல்லலாம். சந்திரயான் பணியை பெண் விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Happy Independence Day Respect to soldiers Jaihind Prime Minister Modi cheers

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி20 நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன. எனது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் திறமைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். விவசாயத் துறையில் இந்தியா முன்னேறி வருவதற்கு விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா நவீனமயமாகி வரும் நிலையில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புக்காக நான் நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி, உலகம் இன்னும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. போர் மற்றொரு நெருக்கடியை உருவாக்கியது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் தன் பிடியில் வைத்துள்ளது. நமது அத்தியாவசிய தேவைக்கு ஏற்ற பொருட்களை இறக்குமதி செய்யும் போது, பணவீக்கத்தையும் இறக்குமதி செய்வது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், இந்தியா பணவீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

உலகின் மற்ற நாடுகளை விட நமது நிலைமை சிறப்பாக உள்ளது என்பதற்காக நாம் திருப்தியடைய முடியாது. பணவீக்கத்தின் சுமை எனது நாட்டின் குடிமக்கள் மீது மேலும் விழுவதை குறைக்க நான் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் அந்த நடவடிக்கைகளை எடுப்போம், எனது முயற்சிகள் தொடரும்.

நாட்டில் பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலகப் பொருளாதார அமைப்பில் 10வது இடத்தில் இருந்தோம். இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சியால், ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம், இது அப்படியே எளிதாக தானாக நடக்கவில்லை. நாட்டை தன் பிடியில் வைத்திருந்த ஊழல், கசிவுகளை தடுத்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கினோம் என்று கூறினார்.

2014, 19 தேர்தல்களில் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில் அந்த தடைகளை உடைத்தெறிந்தோம். எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றன. பெரும்பான்மை அரசு அமைந்ததன் காரணமாக சீர்திருத்தங்களை செய்ய எனக்கு நம்பிக்கை கிடைத்தது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.

பெரும்பான்மை அரசினால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும். எனவே அடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வளர்ந்த நாடுகளைப் போல இணையற்றதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+