டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் சீனா.. மறுபக்கம் பாகிஸ்தான்.. எதற்கும் இந்தியா தயார்.. முப்படைகளும் ரெடி.. பிபின் ராவத்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா, பாகிஸ்தான் என்று இருமுனை தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அனைத்துக்கும் இந்தியா தயாராகவே இருக்கிறது என்று இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்திய ராணுவம் அனைத்திற்கும் தயாராக உள்ளது - முப்படைகளின் தளபதி பிபின் ராவத்

    அமெரிக்கா, இந்தியா போர் தந்திர கூட்டு அமைப்பில் பேசிய பிபின் ராவத், ''சீனாவும், பாகிஸ்தானும் பொருளாதாரம், ராஜ தந்திரம், ராணுவம் என்று அனைத்திலும் கூட்டு அமைத்து செயல்பட்டு வருகின்றன.

    திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா.. ராஜ்நாத்தை சந்திக்க தீவிர முயற்சி.. என்ன நடந்தது?திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா.. ராஜ்நாத்தை சந்திக்க தீவிர முயற்சி.. என்ன நடந்தது?

    மேற்கில் மிரட்டல்

    மேற்கில் மிரட்டல்

    பாகிஸ்தானுடனான சீன பொருளாதார ஒத்துழைப்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஆதரவு என்று தொடர்ந்து ராணுவ, பொருளாதார மற்றும் ராஜதந்திர ஆதரவுடன் இவர்களது கூட்டு நீடித்து வருகிறது. இது எங்களையும் உயர்பட்ச தயார் நிலையில் வைத்திருக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இவர்களது கூட்டு நடவடிக்கை வடக்கு மற்றும் மேற்கில் எங்களுக்கு மிரட்டலாக இருக்கிறது. எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    பதிலடி கொடுப்போம்

    பதிலடி கொடுப்போம்

    இவர்களது கூட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள இரண்டு வகையிலான யுக்திகளுக்கு திட்டமிட்டுள்ளோம். வடக்கில் இருந்து ஏதாவது சிக்கல் என்றால், பாகிஸ்தான் இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, சிக்கல்களை உருவாக்கும். ஆதலால் இங்கு நாங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பாகிஸ்தான் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க முன்வந்தாலும் அவர்களுக்குத்தான் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    இந்தியாவுடன் பாகிஸ்தான் மறைமுகப் போர் நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதி வழங்குவது, ஆயுதங்கள் வழங்குவது என்று இந்திய மண்ணில் தீவிரவாதத்தை பரப்பி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் இதைத்தான் பாகிஸ்தான் செய்து வருகிறது.

    முப்படை

    முப்படை

    கடந்த 1993ஆம் ஆண்டில் இந்தியா, சீனா, அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையும் மீறிதான் எல்லையில் தற்போது சீனா செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்த ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சிறந்த முறையில் எங்களது ராணுவம், கடற்படை, வான்படை மூலம் சீனாவுக்கு பதிலடி கொடுப்போம்.

    இந்திய கடல் பகுதி

    இந்திய கடல் பகுதி

    இந்தியா, அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் இந்திய கடல் பரப்பில் சொந்தம் கொண்டாடுவதை தடுப்பதற்கு இந்த நாடுகளின் ஒத்துழைப்பு உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    India is facing threat from china and Pakistan Chief of Defence Staff General Bipin Rawat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X