டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாப் கியரில் வளரும் இந்திய பொருளாதாரம்! 8 வருஷம் வெயிட் பண்ணுங்க.. எங்கயோ போயிடலாம்.! முக்கிய காரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து வல்லுநர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் கொரோனா காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா தொடங்கிப் பல நாட்டுப் பொருளாதாரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டன.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு இல்லை. இருப்பினும், ஓப்பீட்டளவில் மற்ற நாடுகள் உடன் கம்பேர் செய்யும் போது இந்தியா பொருளாதாரம் ஓரளவே நல்ல நிலையில் இருந்தது என்றே சொல்லலாம்.

 பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவிக்கரம் நீட்டிய சவுதி அரேபியா.. 1 பில்லியன் டாலர் முதலீடு! பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. உதவிக்கரம் நீட்டிய சவுதி அரேபியா.. 1 பில்லியன் டாலர் முதலீடு!

 பொருளாதாரம்

பொருளாதாரம்

சமீபத்தில் தான் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5ஆம் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து. இந்நிலையில், வரும் காலத்தில் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்த வல்லுநர்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர். அதாவது வரும் 2030ஆம் ஆண்டில் இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்தியா

இந்தியா

இது குறித்து பொருளாதார வல்லுநர் அரவிந்த் விர்மானி கூறுகையில், "இந்தியா முன்னேறி வருகிறது, எனது முந்தைய கணிப்பின்படி 2028-2030க்குள், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நிச்சயம் மாறும். இது முக்கியமானதாகும், இது நமது வெளியுறவுக் கொள்கை தொடங்கி உலக நாடுகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் வரை அனைத்தையும் மாற்றும். சர்வதேச அளவில் இந்தியாவின் பார்வையையே இது மாற்றும்.

 டாப் இடத்தில்

டாப் இடத்தில்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பைக் கூட்டும். கடந்த 20-30 ஆண்டுகளில், நாம் சீனாவை விட மிகவும் பின்தங்கி இருந்தோம். ஆனால், இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது" என்றார். பிரிட்டன் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2019இல் முதல் முறையாக இந்தியா, பிரிட்டன் பொருளாதாரத்தை ஓவர்டேக் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இது தொடர்பாக மற்றொரு பொருளாதார வல்லுநர் சச்சின் சதுர்வேதி, "நாம் 2ஆவது முறையாகப் பிரிட்டனை மிஞ்சியுள்ளோம். இப்போது நாம் மூலதனச் செலவினங்களில் கவனம் செலுத்துகிறோம். வருவாய் செலவினங்களைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறது. இதனால் இந்தியா பொருளாதாரம் மிகவும் சீரான முறையில் வளர்ச்சியடைகிறது" என்றார்.

பிரிட்டன்

பிரிட்டன்

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பிரபல பொருளாதார நிபுணர் சரண் சிங் கூறுகையில், "இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்து நாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அதேநேரம் மறுபுறம் இங்கிலாந்தின் பொருளாதாரம் மோசமாகச் சிதைந்து உள்ளது

 பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

2027க்கான மதிப்பீடுகள் மிகவும் சிறப்பாகவே உள்ளது. சர்வதேச பொருளாதாரமே மந்த நிலையில், சிக்கித் தவிக்கும் போது, ​​இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் மிக சிறப்பாகவே உள்ளது. அடுத்து வரும் பிரிட்டன் பிரதமர் தேர்தலிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது" என்றார். இப்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி நாடுகள் டாப் 4 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Experts suggest that by 2030 India will become the third largest economy globally. India overtook the United Kingdom as the fifth largest economy in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X