India- Pakistan: மார்ச் 21-ல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும்! பெண் ஜோதிடர் கணிப்பு
டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா, இந்த மாதம் 21-ஆம் தேதி தாக்குதல் நடத்தும் என்றும், இது ஓரிரு மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளுமாறும் பெண் ஜோதிடர் ஒருவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, பிப்.28ஆம் தேதி முதல் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டுகளை வீசி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் ஈரானை அடுத்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப் போவதாக பெண் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: கிரகங்களின் நிலைகளை கணக்கிட்டு பார்க்கும் போது மார்ச் 21 ஆம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என தெரிகிறது.
எனவே மருந்துகள், உலர் உணவுகள், சூரிய மின்சக்தி சார்ஜர்கள் உள்ளிட்டவைகளை ஒன்றிரண்டு மாதங்களுக்கு தேவையானதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 21 ஆம் தேதி பாகிஸ்தானை ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் சுற்றி வளைக்கும், மறுபக்கம் இந்தியா தாக்கும்.
ரம்ஜான் முடிந்ததும் மார்ச் 19ஆம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அப்போது புதன்,ராகு, செவ்வாய் ஆகியவை 4ஆம் வீட்டில் அமர்ந்து அங்காரக யோகம் தரும். 5ஆம் வீட்டில் சூரியன், சனி, சுக்கிரன் ஆகியவை இணையும். இதனால் கிரகணத்திற்கு பிறகு 30 முதல் 35 நாட்கள் பலவீனமான காலம் ஆகும். துர்கையின் சக்தி நம் நாட்டுடன் இருக்கும். அத்துடன் பிரதமர் மோடியின் மங்கள மகாதசை, கிரகங்களின் நிலையும் தாக்குதலுக்கு தூண்டுதலாக அமையும். மார்ச் 21 ஆம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைய போகிறது. இவ்வாறு அந்த பெண் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய முக்கிய சம்பவங்கள் வரலாற்றில் பல உள்ளன. இவை பெரும்பாலும் காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடி அல்லது எல்லை மோதல்களால் ஏற்பட்டவை.
அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1947-1948 இந்தியா-பாகிஸ்தான் போர் (முதல் காஷ்மீர் போர்): அக்டோபர் 22, 1947 முதல் ஜனவரி 5, 1949 வரை நடந்தது. பாகிஸ்தான் ஆதரவு பழங்குடியினர் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயன்றதால் இந்தியா ராணுவத்தை அனுப்பியது. ஐ.நா. போர் நிறுத்தம் மூலம் முடிந்தது.
1965 இந்தியா-பாகிஸ்தான் போர் (இரண்டாவது காஷ்மீர் போர்): ஆகஸ்ட் 5, 1965-இல் பாகிஸ்தான் ஆபரேஷன் ஜிப்ரால்டர் மூலம் காஷ்மீரில் ஊடுருவியது. இந்தியா செப்டம்பர் 6-இல் பதிலடி தாக்குதல் நடத்தியது. செப்டம்பர் 22, 1965-இல் ஐ.நா. போர் நிறுத்தம்.
1971 இந்தியா-பாகிஸ்தான் போர்: டிசம்பர் 3, 1971 முதல் டிசம்பர் 16, 1971 வரை. கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) விடுதலைக்கு இந்தியா உதவியது. பாகிஸ்தான் 90,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.
1999 கார்கில் போர்: மே-ஜூலை 1999. பாகிஸ்தான் ராணுவம் கார்கில் பகுதியில் ஊடுருவியது. இந்தியா ஆபரேஷன் விஜய் மூலம் பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது.
2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: செப்டம்பர் 28-29, 2016. உரி தாக்குதலுக்கு (செப்டம்பர் 18) பதிலடியாக இந்தியா PoK-இல் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
2019 பாலகோட் வான்வழி தாக்குதல்: பிப்ரவரி 26, 2019. புல்வாமா தாக்குதலுக்கு (பிப்ரவரி 14) பதிலடியாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது முகாம் மீது விமான தாக்குதல் நடத்தியது.
2025 ஆபரேஷன் சிந்தூர்: மே 6-7, 2025. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22, 2025 - 26 பேர் உயிரிழப்பு) பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் PoK-இல் 9 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மே 7 முதல் 10 வரை 4 நாட்கள் மோதல் நீடித்து, மே 10-இல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications