Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்

இதற்கு முன்னர் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று இந்தியாவை பெரிய அளவில் பாதித்திருந்த நிலையில், அந்த ஆண்டுதான் மரண தண்டனை குறைவாக பதிவாகியிருந்தது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 2022ம் ஆண்டு மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2022ம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 539 பேர் மரண தண்டனை மூலம் உயிரிழந்துள்ளனர்.

மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் சமீபக காலங்களாக தீவிரமாக ஒலித்து வரும் நிலையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை Project 39A எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, "கடந்த 2016ம் ஆண்டுதான் அதிக அளவில் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அந்த ஆண்டுதான் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

மேல் முறையீடு

மேல் முறையீடு

இந்தியாவின் மக்கள் தொகையானது கடந்த 2015ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை சுமார் 40% உயர்ந்திருக்கிறது. மற்றொருபுறம் குறிப்பாக விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் அதிகமானோர் மரண தண்டனை எதிர்கொள்கின்றனர். தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்தாலும் அவர்களுக்கு கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே சரி என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

கைது

கைது

கடந்த ஆண்டு மரண தண்டனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் 2008 தொடர் குண்டு வெடிப்பு வழக்குதான். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 70 நிமிட இடைவெளியில் சுமார் 22 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். கிட்டதட்ட 230 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடைவடிக்கைகள் மட்டுமே 8 ஆண்டுகள் நீடித்தன.

விசாரணை

விசாரணை

இது மட்டுமல்லாது சம்பவம் நடந்த அடுத்த நாள் வெடிக்காத 4 குண்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ளோர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல மீதமுள்ள 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

குறைவு

குறைவு

சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னர் எந்த ஒரு வழக்கிலும் இந்த அளவு எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. கடைசியாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அதிகபட்சமாக 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே குஜராத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்புதான் 2022ம் ஆண்டு இந்தியாவில் மரண தண்டனை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக பாரக்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டுதான் இந்தியாவில் குறைந்த அளவில் மரண தண்டனை வழக்குகள் பதிவாகியிருந்தன. இதற்கு காரணம் கொரோனா தொற்று பரவல்தான். 2020ம் ஆண்டு வெறும் 77 பேர்தான் மரண தண்டனை மூலம் தூக்கிலிடப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+