டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2018-2019 நிதியாண்டு மிக மோசம்.. சரிந்தது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.. அதிர்ச்சி அறிக்கை!

கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. நிலையான முதலீடு இல்லாததாலும், மக்களின் தனிநபர் நுகர்வு குறைவாக இருந்ததாலும், இந்த பின்னடைவை இந்தியா சந்தித்து இருக்கிறது.

பிரதமர் மோடி, இந்தியா வேகமாக வளரும் நாடு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்றும் அவர் கணித்து இருந்தார். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

நடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா! நடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா!

மோசமான சரிவு

மோசமான சரிவு

கடந்த 2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தை வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டதை போலவே வருவாயும், வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

எவ்வளவு குறைந்தது

எவ்வளவு குறைந்தது

அதன்படி 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. 7 சதவிகித பொருளாதார வளர்ச்சிதான் கடந்த ஐந்து வருடத்தில் மிக மோசமான வளர்ச்சி ஆகும். இதை மீண்டும் தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு காரணங்கள் நிறைய தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நிலையான முதலீடு இல்லாததால் வர்த்தக துறையில் போதுமான வளர்ச்சி ஏற்படவில்லை. அதேபோல் மக்களின் தனிநபர் நுகர்வு குறைவாக இருந்ததாலும் பொதுவாம் நிலையான வருமானம் கிடைக்கவில்லை. இது உற்பத்தியை பாதித்து வளர்ச்சியை பாதித்துள்ளது. இதனால்தான் இந்த பின்னடைவை இந்தியா சந்தித்து உள்ளது.

தீர்வு என்ன

தீர்வு என்ன

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த பணப்புழக்கம், சரிந்து இருக்கும் பொருளாதார வளர்ச்சியை கொஞ்சம் சரி செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

English summary
India's economic growth rate slows down in 2018-2019 says a shocking report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X