தலைநிமிர்ந்த இந்தியா.. சீனா கூட கூட்டு சேர்ந்த பாகிஸ்தானுக்கு இப்படி ஒரு சறுக்கலா!
டெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணியும், தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் உயர தொடங்கியுள்ளது. அதே நேரம், பாகிஸ்தானில் இது இரண்டும் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிவிப்பில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாசிட்டிவாக மாற்றும் என்று சொல்லப்படுகிறது.

அந்நிய செலாவணி உயர்வு:
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த டிசம்பர் மாதம் 704.88 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ ரூ.61 லட்சம் கோடி) என்கிற அளவில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் இது சரிய தொடங்கியது. ஆனால், ஜனவரி கடைசி வாரத்தில் மீண்டும் உயர்ந்திருக்கிறது. ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி நம்மிடம் 630.6 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தை விட, இது 1.05 பில்லியன் டாலர் அதிகமாகும்.
ஏன் அந்நிய செலாவணி முக்கியம்?:
இந்தியாவிடம் சில வளங்கள் கிடையாது. குறிப்பாக பெட்ரோல் வளம், சவுதி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாம் அதிக அளவில் பெட்ரோலை இறக்குமதி செய்கிறோம். இதற்கான கட்டணத்தை அவர்கள் இந்திய ரூபாயில் பெறுவதில்லை, மாறாக அமெரிக்க டாலரில்தான் கேட்கிறார்கள். எனவே, நம்மூர் பணத்தை கொடுத்து அமெரிக்க கரன்சியை வாங்கி அவர்களிடம் கொடுக்கிறோம். ஆக சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் தேவை. இந்த டாலர் நம்மிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்கிற கணக்குதான் 'அந்நிய செலாவணி' என சொல்லப்படுகிறது.
தங்கத்தை தக்க வைத்த இந்தியா:
அந்நிய செலாவணி போலவே, தங்கம் இருப்பையும் இந்தியா அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் இருப்பு 1.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, மொத்தம் 70.89 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் தங்கத்தின் இருப்பு என்பது மிக முக்கியமானது. இந்தியா ரூபாயின் மதிப்பு சரியும்போது தங்கத்தை வைத்து அதை சமாளிக்க முடியும்.
கடந்த 1991ம் ஆண்டு மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கடுமையாக குறைந்து இருந்தது. உடனடியாக கடன் வாங்கி இதை சமாளிக்க வேண்டும். ஆனால் ரூபாயின் மதிப்பும் சரிந்ததால் கடன் கிடைக்கவில்லை. தங்கம்தான் இந்தியாவை காப்பாற்றியது. தங்கத்தை பார்த்துதான் ஐஎம்எஃப் நமக்கு கடன் கொடுத்தது. பொருளாதாரமும் சமநிலையடைந்தது.
பாகிஸ்தானின் நிலைமை என்ன?:
நாம் இப்படி தப்பித்துக்கொண்டாலும், பாகிஸ்தானின் நிலை இன்னும் சிக்கலாகவே இருக்கிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணியும் தங்கம் கையிருப்பும் சரசரவென குறைந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்னர் பாகிஸ்தான் அதிபர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு, அந்நாட்டின் அதிபரை சந்தித்து பாகிஸ்தான்-சீனா இடையே சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தார். இந்த உறவு உலக நாடுகளால் கவனிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், பாகிஸ்தான் மீது ஒரு கண் வைத்திருந்தது.
விளைவு தற்போது பாகிஸ்தானின் தங்க இருப்பும், அந்நிய செலாவணியும் வேகமாக குறைந்து வருகிறது. இதனை உடனடியாக தடுக்கவில்லையெனில், அடுத்த இலங்கையாக பாகிஸ்தான் மாறும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மறுபுறம் இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டியும் வருகின்றனர்.
-
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications