இன்று தமிழகம்- 33, மகாராஷ்டிரா- 23 பேருக்கு ஓமிக்ரான் தொற்று-இந்தியாவில் பாதிப்பு 300-ஐ கடந்தது!
டெல்லி: தமிழகத்தில் புதியதாக 33 பேருக்கும் மகராஷ்டிராவில் 23 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் அதிவேகமாக ஓமிக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ஓமிக்ரான் பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 238 ஆக இருந்தது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64, தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 21 ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்திருந்தது.
|
தமிழகத்தில் 33 பேருக்கு பாதிப்பு
இன்று தமிழகத்தில் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34. இதனையடுத்து இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது.

கேரளாவில் அதிகரிப்பு
ஒடிஷாவில் நைஜீரியாவில் இருந்து வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

மகாராஷ்டிராவில் 88 பேருக்கு பாதிப்பு
அதேபோல் கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு இன்று ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31. மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. மகாராஷ்டிராவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 88. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்ச பாதிப்பு உள்ளது. குஜராத் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. அம்மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 25 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது.

ம.பியில் இரவு நேர ஊரடங்கு
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். மேலும் பல மாநிலங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாட்டின் பல மாநிலங்களும் ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications