"இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழலாம்".. ஆனால்.. ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் 'பரபர' பேச்சு
டெல்லி: இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் முஸ்லிம்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
"அதே சமயத்தில், தங்கள் பெருமைகள், வரலாறுகள் குறித்து முஸ்லிம்கள் தேவையில்லாமல் தம்பட்டம் அடிக்கக் கூடாது" என்றும் மோகன் பாகவத் கூறினார்.
முஸ்லிம்கள் குறித்த மோகன் பாகவத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.

வியூகத்தை மாற்றிய மோகன் பாகவத்
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்தது முதலாக, சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களின் தாக்கத்தால் இந்த பேச்சுகள் வைரலாகி சில இடங்களில் மத ரீதியிலான மோதலுக்கும் வழிவகுத்தன. இதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது வியூகத்தை மாற்றினார். முஸ்லிம்களை தரக்குறைவாக பேச வேண்டாம் என வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். பல இடங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் என்ற ரீதியிலும் அவரது பேச்சு இருந்தது. இதனால் மோகன் பாகவத்துடன் முஸ்லிம் தலைவர்கள் பலரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

"முஸ்லிம்கள் அச்சமின்றி வாழலாம்"
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பாகவத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் முஸ்லிம்களை குறிப்பிட்டு சில அறிவுரைகளை கூறியிருந்தார். அவரது உரையின் ஒரு பகுதி: நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதுமே இந்துஸ்தான் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்து ராஷ்டிரமாகவே இந்தியா இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்தியாவில் முஸ்லிம்களும் அச்சமின்றி வாழலாம். அவர்களுக்கு எந்த தீங்கும் நிகழாது. ஆனால், சில விஷயங்களை முஸ்லிம்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

"தம்பட்டம் அடிக்க வேண்டாம்"
தேவையில்லாமல் தங்களின் பெருமைகள் குறித்தும், வரலாறு குறித்தும் முஸ்லிம்கள் தம்பட்டம் அடிக்கக் கூடாது. உதாரணமாக, "நாமே உயர்ந்தவர்கள்", "ஒருகாலத்தில் இந்தியாவை நாம் ஆண்டோம்; மீண்டும் நாம் ஆளுவோம், நாம் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். அதனால்தான் நம்மால் மற்றவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை" என்பன போன்ற பேச்சுகளை முஸ்லிம்கள் கைவிட வேண்டும்.

"இதுதான் இந்துத்துவா"
இந்த நேரத்தில் இந்துக்களும் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்து என்பதே நமது அடையாளம்; நமது தேசம்; நமது நாகரீக பண்பு. அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்றுதான் நமது நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. "நாங்கள்தான் சரி; மற்றவர்கள் எல்லாம் தவறு" என நாம் சொல்பவர்கள் கிடையாது. மாறாக, "எங்கள் இடத்தில் நாங்கள் சரி. உங்கள் இடத்தில் நீங்கள் சரி என அனுசரித்து செல்பவர்கள் நாம். இதுதான் இந்துத்துவா. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications