அணுஆயுத ஏவுகணையை ஏவிய இந்தியா.. பாகிஸ்தானுக்காக ‛ஸ்பெஷல்’ தயாரிப்பு இதுதான்.. அலறவிடும் ராணுவம்
டெல்லி: பாகிஸ்தானுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட பிரித்வி II மற்றும் அக்னி I ஏவுகணைகளை ராணுவம் விண்ணில் ஏவி சோதித்து வெற்றி கண்டுள்ளது. இந்த ஏவுகணைகள் அணு ஆயுதத்ததையும் சுமந்து செல்லும் என்பதால் பாகிஸ்தான் கதிகலங்கி போய் உள்ளது. இந்த அக்னி I, பிரித்வி II ஏவுகணைகளின் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின்
பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதையடுத்து நம் நாடு மே மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ஏவுகணைகள், போர் விமானங்கள், ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்கள் தகர்ப்பட்டன.

நம் நாடு அடித்த அடியில் கதிகலங்கிய பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. போரில் தோற்றுப்போன பாகிஸ்தான், தனது ராணுவ பலத்தை அதிகரிக்க சீனா, அமெரிக்காவிடம் தொடர்ந்து ஆயுதம் கேட்டு கையேந்தி நிற்கிறது.
மறுபுறம் நம் நாடும் முப்படைகளின் வலிமையை அதிகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய ஆயுதங்களை தயாரிப்பது, ஏற்கனவே இருக்கும் ஆயுதங்களை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்துவது என்று பாதுகாப்பு துறை அதிரடி காட்டி வருகிறது. கடந்த 16ம் தேதி ஆகாஷ் பிரைம் மிசைல் சிஸ்டத்தை நம் நாடு லடாக்கில் சோதனை செய்து பார்த்தது. லடாக்கில் 15,000 அடி உயரத்தில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டது நம் நாடு இது சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வகையில் காஷ்மீர், லடாக் மற்றும் வடகிழக்கு மலை தொடர்களில் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை வானில் இடைமறித்து துல்லியமாக தாக்கும் சக்தி ஆகாஷ் பிரைமுக்கு உண்டு.
இதையடுத்து தான் 2 ஏவுகணைகளை பாதுகாப்பு துறை சோதனை செய்துள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் கடந்த 17 ம் தேதி இந்த சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் அக்னி-1, பிரித்வி-2 ஏவுகணைகளை ஏவி இந்தியா சோதனை செய்தது.
இரு ஏவுகணைகளும் இலக்கை துல்லியமாக தாக்கி, சோதனையை வெற்றி பெற செய்தன. இதில் பிரித்வி-2 ஏவுகணை 350 கிலோ வரை வெடிப்பொருட்களை சுமந்து 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும்.
அதே நேரம் அக்னி-1 ஏவுகணை 1,00 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று 700 முதல் 900 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கும். இந்த 2 ஏவுகணைகளும் வெடிமருந்து மட்டும் இன்றி அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை.
இவை ஏற்கனவே நம் நாட்டின் பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு என்றே பிரத்யேகமாக இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டதாகும். இதுவரை தனித்தனியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக இரு ஏவுகணைகளையும் நம் நாடு சோதனை செய்துள்ளது. நம் நாட்டிம் அக்னியின் பிற ஏவுகணைகளும் உள்ளது. அதன்படி அக்னி-2, அக்னி-3, அக்னி-5 ஏவுகணைகள் சீனாவை எதிர்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டவை.
இதில் அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கும். அக்னி-3, 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரையும், அக்னி-5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையும் சென்று தாக்கும். இதனை பல முறை இந்தியா சோதனை செய்து இருக்கிறது. இருப்பினும் ஒரே நேரத்தில் 2 அணு சக்தி ஏவுகணைகளை சோதனை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications