டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கை கொடுத்த புயல்களால் நிரம்பி வழியும் 49 அணைகள் - இனி தென்மேற்குப் பருவமழையும் இருக்கு

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. புயல்கள், கோடை மழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன

Google Oneindia Tamil News

டெல்லி: மே மாதத்தில் உருவான டவ் தே புயல், யாஸ் புயல் புண்ணியத்தால் பல மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. தென்மேற்குப் பருவமழை தற்போது துவங்கி பெய்து வரும் நிலையில் நடப்பாண்டு நீர் நிலைகள் நிரம்பி எங்கும் செழிப்போடு காணப்படுகிறது.
நாட்டில் உள்ள 130 பெரிய அணைகளில் 49 அணைகளில் நீர் நிறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே கோடைகளில் வெயில் சுட்டெரிக்கும் நீர் நிலைகள் வறண்டு காணப்படும். நடப்பாண்டு கோடை காலம் அதிக மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து விட்டது. அதற்குக் காரணம் அரபிக்கடல், வங்கக் கடலில் உருவான புயல்தான்.

India summer cyclones 130 reservoirs 49 have more water than they had stored in June 2020

மே மாதத்தில் அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தில் கரையைக் கடந்தாலும் நாட்டின் மேற்கு கடலோர மாநிலங்களிலும் கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. அதே போல யாஸ் புயல் உருவாகும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. வடக்கு கடலோர ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்தது.

கடந்த 3ஆம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கும் முன்பே புயல் ஏற்பட்டு பெய்த மழையால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கேரளாவில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளலளவை எட்டியுள்ளன. ஜூன் 1ஆம் தேதி முதலே பாசனத்திற்காக பல அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இன்னும் பல மாநிலங்களில் தீவிரமடையவில்லை. அதற்கு முன்பாகவே மத்திய நீர் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் 130 பெரிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு அதிகம் உள்ளது. இது ஆண்டின் இந்த நேரத்திற்கான சராசரி சேமிப்பகத்தை விட அதிகமாக உள்ளது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 21% சதவிகிதம் மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும்.

ஜூன் 17 நிலவரப்படி, 130 நீர்த்தேக்கங்களில் கூட்டுப் பங்கு 47.63 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) அல்லது 174.23 பிசிஎம் மொத்த நேரடி சேமிப்புத் திறனில் 27 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 55.11 பி.சி.எம். மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. 130 நீர்த்தேக்கங்களில் 49 நீர்த்தேக்கங்கள் அதிக நீர் இருப்பை கொண்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்ததை விட இந்த நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவை ஜார்கண்ட், திரிபுரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஏழு மாநிலங்களில் அமைந்துள்ளன.

கடந்த 2020 ஜூன் மாதத்தை விட குறைவான சேமிப்பு கொண்ட நீர்த்தேக்கங்களில், பல மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பெரிய மாநிலங்களில் உள்ளன, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் தவிர. இந்த ஆண்டு, ஒடிசாவின் ஹரிஹார்ஜோர் மற்றும் மகாராஷ்டிராவின் உஜ்ஜயினி ஆகிய இரண்டு பெரிய அணைகள் தண்ணீர் வற்றிப்போயுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஹரிஹார்ஜோர் அதன் திறனில் 59% சேமித்து வைத்திருந்தது.

நாட்டின் மிக முக்கிய ஆற்றுப்படுகைகளான கங்கை, நர்மதா, தபதி, கட்ச், கிருஷ்ணா, மகாநதி மற்றும் காவிரி நதிகளில் தண்ணீர் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. மஹி மற்றும் சிந்து நதிப் படுகைகள் முறையே இயல்பான மற்றும் குறைவான தண்ணீர் இருப்புக்களைக் கொண்டுள்ளன.

வடக்கு பிராந்திய மாநிலங்களில் உள்ள (இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்) எட்டு நீர்த்தேக்கங்களில், ஜூன் 17 அன்று கிடைக்கக்கூடிய பங்கு 3.82 பி.சி.எம், அல்லது அவற்றின் மொத்த நேரடி சேமிப்புத் திறனில் 20% ஆகும். இது 2020 (38%) மற்றும் 10 ஆண்டு சராசரி (32%) சேமிப்பிற்குக் கீழே உள்ளது.

கிழக்கு பிராந்தியத்தில் உள்ள 20 நீர்த்தேக்கங்களில் (ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து), கிடைக்கக்கூடிய நீர் இருப்பு 4.59 பி.சி.எம், அல்லது அவற்றின் மொத்த நேரடி சேமிப்பு திறனில் 23% ஆகும். கடந்த ஆண்டு, இந்த நீர்த்தேக்கங்கள் 28% சேமித்து வைத்திருந்தன. 10 ஆண்டு சராசரி பங்கு 21% ஆகும்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை உள்ளடக்கிய மேற்கு பிராந்தியத்தில் 42 பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. 9.95 பிசிஎம்இல், இவை தற்போது அவற்றின் மொத்த நேரடித் திறனில் 28% ஆக உள்ளன. ஜூன் 2020 இல், அவை 36% திறன் கொண்டவை. 10 ஆண்டு சராசரி 19% ஆகும்.

மத்திய இந்தியாவின் 23 நீர்த்தேக்கங்களில் (உ.பி., உத்தரகண்ட், எம்.பி., சத்தீஸ்கர்), தற்போதைய சேமிப்பு 12.73 பி.சி.எம், அல்லது அவற்றின் மொத்த நேரடித் திறனில் 28% ஆகும். இது கடந்த ஆண்டின் சேமிப்பகத்திற்கும் (37%) கீழே உள்ளது, அத்துடன் இங்கு 10 ஆண்டு சராசரி (24%) உள்ளது.

தென் பிராந்தியமான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு 37 நீர்த்தேக்கங்களைக் கொண்டுள்ளது, இதில் கிடைக்கும் பங்கு 16.55 பி.சி.எம் அல்லது 30% திறன் கொண்டது. இது 2020 (24%) மற்றும் 10 ஆண்டு சராசரி (17%) அளவை விட அதிகமாகும்.

நடப்பாண்டு கோடை காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியான வெப்பநிலை காணப்பட்டது. வழக்கமாக மார்ச்-ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகும். நடப்பாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் தண்ணீர் இருப்பு குறையாமல் குளுகுளு சீசன் காணப்பட்டது.

மே மாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரங்களில், டவ்தே மற்றும் யாஸ் புயல்கள் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளுக்கு இடையே பரவலாக மழையைக் கொடுத்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் , உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் நல்ல மழை கிடைத்தன.

மே 12-19 மற்றும் மே 20-26 ஆகிய நாட்களில் அகில இந்திய வாராந்திர மழை முறையே 127% மற்றும் 94% நீண்ட கால சராசரிக்கு மேல் இருந்தது. இந்த அனைத்து காரணிகளும் 130 நீர்த்தேக்கங்களில் 110 இல் ஜூன் மாத சாதாரண திறனில் குறைந்தது 80 சதவிகிதம் தண்ணீர் இருப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.

இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் தலைவர் சொல்லும் காரணம் இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் தலைவர் சொல்லும் காரணம்

தென்மேற்குப்பருவமழை காலம் செப்டம்பர் வரை நீடிக்கும். நடப்பாண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. எனவே மீதமுள்ள நீர் நிலைகளும் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கலாம். விவசாயப்பணிகளும் நாட்டின் பல பகுதிகளில் செழிப்போடு தொடங்கியிருப்பது வளர்ச்சிக்கான அறிகுறிகளாகும்.

English summary
Two strong cyclones Tauktae and Yaas brought significant rainfall during the summer. The 130 major reservoirs monitored by the Central Water Commission have already stored 27% of their total capacity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X