டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவுக்கு வரும் பயோலாஜிக்கல் இ தடுப்பூசி.. மாதம் 30 கோடி டோஸ்களை பெற இந்தியா திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மாதத்திற்கு 30 கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை பயாலாஜிக்கல் இ மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

பயாலாஜிக்கல் இ என்ற நிறுவனத்துடன் 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கு டிசம்பருக்குள் உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்படும்.

இந்த உத்தரவுக்கான முன்பணமாக மத்திய பயாலாஜிக்கல் இ என்ற நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாயை செலுத்துகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு பிறகு இது இந்தியாவில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி ஆகும்.

India to procure over 30 crore doses of vaccine per month?

ஏற்கெனவே கோவிஷீல்டு, கோவாக்சின், சைகோவ் டி வரிசையில் பயாலாஜிக்கல் இயும் இணைகிறது. ஏற்கெனவே மூன்றாது இந்திய நிறுவனமான சைகோவ் டி 60 லட்ச கொரோனா டோஸ்களை உற்பத்தி செய்துவிட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் RBD புரத துணை அலகு தடுப்பூசியான, Biological-E-இன் COVID-19 தடுப்பூசி, தற்போது கட்டம் -3 மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. இதன் முடிவுகளை நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.

ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல் இ என்ற நிறுவனம் இந்த மாதம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 30 கோடி டோஸ்கள் இல்லாமல் மற்றொரு கொரோனா தடுப்பூசி நிறுவனமான ஜென்னோவாவிடம் இருந்து இந்தியா தடுப்பூசிகளை பெறும் என தெரிதிறது.

தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. கலெக்டர் அதிரடி.. மதுபிரியர்கள் அதிர்ச்சி! தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. கலெக்டர் அதிரடி.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!

தற்போது இந்தியாவில் மூன்று கோவிட் தடுப்பூசிகள் உள்ளன. அவை ஆக்ஸ்போர்டு- சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஆகியவை ஆகும். மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி இதுவரை நாட்டில் 22,10,43,693 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பண்டிகை காலம் மற்றும் இரண்டாவது டோஸை போட்டுக் கொள்வதில் தயக்கம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அது போல் இந்தியாவில் தேவைக்கு போக மீதம் முள்ள தடுப்பூசிகள் மனிதாபிமான அடிப்படையில் டிசம்பர் மாதம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் மாதம 26 கோடி டோஸ்களை இந்தியா பெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை அடைய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

English summary
Sources says that India to procure over 30 crore Covid 19 vaccine doses per month?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X