மாஸ் காட்டப்போகும் இந்திய கடற்படை.. பிரான்ஸுடன் விரைவில் ஒப்பந்தம்! மோடி எடுக்கும் முயற்சி
டெல்லி: இந்திய விமானப்படைக்கு ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய கடற்படைக்கு மேலும் 26 ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்ய பிரதமர் மோடி முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்.10-11ம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல்பாட்டு உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் மோடி பங்கேற்கிறார். மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உடன் பேசி, 26 ரஃபேல் விமானங்களுக்கான உடன்படிக்கையை போட இருக்கிறார் என்றும், விமானம் மட்டுமல்லாது 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் மூன்றை இந்தியாவுக்கு வாங்கவும் திட்டமிட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கடற்படைக்கு ரஃபேல் விமானங்களின் தேவையும், ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களின் தேவையும் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனை வாங்க மத்திய அமைச்சரவை கடந்த 2023ம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. இதனையடுத்து தற்போது இதற்கான பணியில் பிரதமர் இறங்கியுள்ளார்.
ரஃபேல் விமானங்களின் தேவை:
முதல் காரணம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இதை பயன்படுத்த முடியும் என்பதுதான். மட்டுமல்லாது கடற்படைக்கு என தயாரிக்கப்படும் இந்த வகை ரஃபேல் விமானங்களால், சிறிய ரன்வேயில் கூட ஈஸியாக லேண்ட் செய்து டேக்ஆப் செய்ய முடியும். மட்டுமல்லாது இந்த விமானங்களால் BVRAAM, SCALP என இரண்டு வகையான ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.
இதில் BVRAAM ஏவுகணைகள் ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் அதாவது, மணிக்கு 4,940 கி.மீ வேகத்தில் இலக்கை தாக்கும். அதிகபட்சமாக 200 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும். இதுவே இலக்கு 60 கி.மீக்குள் இருக்கிறது எனில், அதனால் நிச்சயம் தப்பிக்கவே முடியாது.
SCALP வகை ஏவுகணைகள் 250–560 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும். இதன் வேகம் கொஞ்சம் கம்மிதான். மணிக்கு 987 கி.மீ வேகத்தில் தாக்கும். இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளாகும்.
ரஃபேல் விமானங்கள் கடற்பரப்பில் இருக்கிறது எனில், வேறு எந்த விமானங்களும் நமது கடற்பரப்புக்குள் நுழைய பயப்படும். குறிப்பாக தொலைதூர மிஷன்களுக்கு இந்த விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இந்திய பெருங்கடலில் இலங்கை மூலமாக, சீனா கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ரஃபேல் விமானங்கள் நிச்சயம் நமக்கு பயன்படும்.
ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி:
இந்தியாவிடம் ஏற்கெனவே இந்த வகையான நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கின்றன. இது மறைந்திருந்து தாக்குதல் நடத்த தயாரிக்கப்பட்ட தரமான நீர்மூழ்கி கப்பலாகும். சர்வதேச அளவில் நம்பிக்கையான நீர்மூழ்கி கப்பலாக இது இருப்பதால், பல நாடுகளில் இதற்கு டிமான்ட் அதிகமாக இருக்கிறது. மட்டுமல்லாது இதில் ஒரு முறை எரிபொருளை நிரப்பிவிட்டால் 45 நாட்களுக்கு 12,038 கி.மீ வரை நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். இதில் 18 வகையான ஆயுதங்களை எடுத்து செல்ல முடியும். 31 பேரை இதில் பயணிக்கலாம்.
சிலி, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகள் இதனை பயன்படுத்தி வருகின்றன. கடலை பொறுத்தவரை இந்த வகை கப்பல் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications