என்னது தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவில் யுத்த பயிற்சியா? அடங்காத பரபரப்பு
டெல்லி: தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவில் யுத்த பயிற்சி வழங்கப்படும் என வெளியான செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றினர். தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த முறை சர்வதேச நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிர்வாகத்தில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடருகிறது. தாலிபான்களை எதிர்த்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச சமூகத்தில் அதிருப்தி நிலவவும் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றன. அண்மையில் , ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கான வெளியுறவு அமைச்சக பிரதிநிதி ஜெ.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கான் சென்றது. இக்குழுவின தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரானில் அகதிகளாக இருக்கும் ஆப்கானியர்களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது.
இதனிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன. அதாவது ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் திறக்கபடுவது குறித்தும் இந்தியாவில் தாலிபான்களின் ஆப்கான் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் பேச்சுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இத்தகைய தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய முதலீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நெருக்கடியில் மத்திய அரசு இருக்கிறது என்கின்றனர் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications