அடுத்த பிரதமர் ரேஸில் முதலிடம் இவருக்குத்தான்.. பரபரக்கும் இந்தியா- சிஎன்எக்ஸ் சர்வே முடிவுகள்
டெல்லி: இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார் என இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளன. இதனால் பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டு கொண்டு பிரசாரத்துக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்த நிலையில் மக்களின் மனநிலை என்ற தலைப்பில் இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து மக்களிடம் கருத்து கணிப்புகளை நடத்தின. அதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் உள்ளிட்ட பல்வேறு கேள்வி கேட்கப்பட்டன.

நம்பிக்கையில்லை
அதில் பெரும்பாலானோர் மோடியின் நல்ல நாட்கள் (அச்சே தின்) வரும் என எதிர்ப்பார்ப்பில் காத்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தனர். அதாவது 46 சதவீதம் பேர் நல்ல நாட்கள் வரும் என்றும் 34 சதவீதம் பேர் நல்ல நாட்களில் நம்பிக்கையில்லை என்றும், 20 சதவீதம் பேர் எதையும் சொல்ல முடியவில்லை என்றும் கூறினர்.

முடியவில்லை
இந்த சர்வேயில் 40 சதவீத மக்கள் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் 36 சதவீதம் பேர் அவ்வாறு சட்டம் கொண்டு வரக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். எம்பிக்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு 36 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும், 28 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும் 15 சதவீதம் பேர் ஒன்றும் சொல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

மற்ற காரணங்கள்
சட்டசபை தேர்தல்களில் பாஜக தோல்வி அடைய காரணம் குறித்து கேட்டபோது வேலையின்மைதான் என 31 சதவீதம் பேரும், விவசாயிகள் பிரச்சினை என 22 சதவீதம் பேரும், பணமதிப்பிழப்பு என 15 சதவீதம் பேரும் ஊழல் என 16 சதவீதம் பேரும் மற்ற காரணங்கள் என 6 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மம்தா பானர்ஜி
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் என 41 சதவீதம் பேரும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என 23 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். அது போல் பிரதமராவதற்கு மாயாவதிக்கு 7 சதவீதம் பேரும், நிதீஷ்குமாருக்கு 5 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜிக்கும் 3 சதவீதம் பேரும் அகிலேஷுக்கு 3 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications