டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மருத்துவ உபகரணங்களின் விலையை உயர்த்த கூடாது".. சீனாவிடம் இந்தியா வைத்த திடீர் கோரிக்கை.. பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விலையை உயர்த்த கூடாது என்று சீனாவிடம் இந்தியா சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    China-விடம் India வைத்த திடீர் கோரிக்கை பின்னணி | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ உபகாரணங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், பிபிஇ கிட்கள், மாஸ்குகள், கிளவுஸ்கள் என்று பல மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது.

    நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் போல மோடியும் காணாமல் போய்விட்டார் - ராகுல் கடும் தாக்கு நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் போல மோடியும் காணாமல் போய்விட்டார் - ராகுல் கடும் தாக்கு

    இந்த உபகரணங்களில் பலவற்றை இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் சீனாவிடம் இருந்து வாங்கி வருகின்றன.

    என்ன

    என்ன

    இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் இந்த பொருட்களை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விலையை சீன நிறுவனங்கள் உயர்த்த கூடாது என்று சீனாவிடம் இந்தியா சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹாங்காங்கிற்கான இந்திய கவுன்சில் ஜெனரல் பிரியங்கா சவுகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    அதில் சீன நிறுவனங்கள் பல தற்போது இந்திய நிறுவனங்களுக்கு இருக்கும் தேவையை பார்த்து, மருத்துவ உபகரணங்களின் விலையை உயர்த்தி வருகிறது. இதை சீன அரசு கட்டுப்படுத்த வேண்டும். பொருட்களின் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதில் திடீர் உயர்வுகளை மேற்கொள்ள கூடாது.

    சப்ளை

    சப்ளை

    அதேபோல் விற்பனையும் தொடர்ச்சியாக நடக்க வேண்டும். இப்போது தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். இதனால் அதற்கு ஏற்றபடி சீன நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க சீன அரசு வழி செய்ய வேண்டும். அதேபோல் சரக்கு விமான போக்குவரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

     போக்குவரத்து

    போக்குவரத்து

    தற்போது நிறுத்தப்பட்டுள்ள சில சரக்கு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். மருத்துவ பொருட்கள் இந்திய நிறுவனங்களுக்கு சென்று சேர்வதை சீன அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் சீன அரசு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று ஹாங்காங்கிற்கான இந்திய கவுன்சில் ஜெனரல் பிரியங்கா சவுகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

     கோரிக்கை

    கோரிக்கை

    சீனாவின் சிசுவான் விமான சேவை கடந்த ஏப்ரல் 26ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தியாவிற்கான 11 சரக்கு விமான சேவையை இந்த நிறுவனம் நிறுத்தியது. இதனால் இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட், ப்ளூ டார்ட் போன்ற நிறுவனங்கள் மட்டுமே சரக்கு விமான சேவையை சீனாவுடன் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் சில சரக்கு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

    English summary
    India wants uninterrupted cargo flights and no hike in medical equipment prices from Chinese companies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X