Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில் நிலையம் ஒன்றில் இக்கட்டான சூழலில் சிக்கிய இளம்பெண் ஒருவருக்கு யாருமே உதவி செய்ய முன்வராத போது, இந்திய ராணுவ வீரர் ஒருவரே அவருக்கு உதவி செய்துள்ளார். அது சிறிய உதவி தான் என்றாலும் அந்த இரவு நேரத்தில் அப்பெண்ணுக்கு அது மறக்கவே முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இந்திய ராணுவம், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பொதுமக்களுக்கு உதவும் அர்ப்பணிப்பிலும் பெயர் பெற்றது. போர் தொடங்கி இயற்கை பேரிடர்கள் வரை எப்போதும் நம்முடன் இருப்பார்கள். இதற்கிடையே அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ரூப் என்ற பெண்ணுக்கு ராணுவ வீரர் உதவியுள்ளார்.

Indian Army Soldier helps Woman at Mathura Railway Station Small gesture turned into greatest help

எப்படி

இது தொடர்பான தகவல்களை அந்த பெண்ணே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மதுராவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் அப்போது ராணுவ வீரர் தனக்கு எப்படித் தக்க நேரத்தில் உதவினார் என்பது குறித்த தகவல்களை அந்த பெண் பகிர்ந்தார்.

இரவு நேரத்தில் அந்த பெண் ரயில் நிலையத்தில் இருக்கவே, அவரது செல்போனில் பேட்டரி தீர்ந்து போய் ஆஃப் ஆகிவிட்டதாம். இதனால் அந்த பெண்ணால் தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறார் என்பதைச் சொல்ல முடியவில்லை. அப்போது மதுரா சந்திப்பில், ஒரு ராணுவ வீரர் தனது பவர் பேங்கை கொடுத்து உதவியிருக்கிறார். அதன் பிறகே ரூப் தனது செல்போனை சார்ஜ் செய்து குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது.

இக்கட்டான சூழல்

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "ஹோலி கொண்டாட நான் ஊருக்குப் போய் இருந்தேன். பிறகு பிரஜ்ஜிலிருந்து திரும்பும்போது, மதுரா சந்திப்பில் இரவு 8:45 மணிக்கு எனது டெல்லி ரயில் இருந்தது. அப்போது என் போனில் இரண்டு சதவீத சார்ஜ் மட்டுமே இருந்தது. ஹோலி கொண்டாட்டத்தால் பவர் பேங்க் தண்ணீரில் விழுந்துவிட்டது. பெற்றோருக்கு எங்கே இருக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும். வெறும் 5 நிமிடம் சார்ஜ் போட்டாலும் கூட போதும்.. பெற்றோருக்கு எங்கு இருக்கிறேன் என்பதை சொல்லிவிடுவேன்.

ரயில் நிலையத்தில் நடைமேடையில் சில கடைகள் இருந்தன. அவர்களிடம் கேட்டேன். 3 கடைகளுக்குச் சென்று கேட்டேன். ஆனால், அவர்கள் உதவ மறுத்துவிட்டனர். காத்திருப்பு அறையும் தொலைவில் இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்போதுதான் நடைமேடை 6க்கு அருகே ஒரு ராணுவ ரயில் வருவதைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை பிறந்தது.

ராணுவ வீரர்

ரயில் வந்து நின்றது. அங்கே ஒரு இந்திய ராணுவ அதிகாரி தனது போனை சார்ஜ் செய்வதைப் பார்த்தேன். யோசிக்காமல் நான் எனது போனை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்ய முடியுமா என்று கேட்டேன். அப்போது எனக்கு யாரும் உதவாத சூழ்நிலையில், அந்த ராணுவ வீரர்தான் முன்வந்தார். ஒரு நொடி கூட யோசிக்காமல், அவர் தனது போனை எடுத்துவிட்டு, என்னிடம் பவர் பேங்கை கொடுத்தார். அந்த தருணம் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. யாரும் உதவாதபோது, இந்திய ராணுவம் அமைதியாக, யோசிக்காமல் உதவியது" என்று ரூப் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

சின்ன உதவி தான்

ராணுவம் என்பது இக்கட்டான சூழல்களில், பேரழிவு, போர், இயற்கை போரிடர்கள் போன்ற சூழல்களில் மக்களைக் காப்பாற்றும். நம்முடன் பக்க பலமாக இருக்கும். ஆனால், அதைத் தாண்டி இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் கூட ராணுவம் எப்போதும் நம்மைக் கைவிடாது என்பதையே இது காட்டுகிறது. சார்ஜ் போட பவர் பேங்க்கை கொடுப்பது என்பது ரொம்பவே சிம்பிளானது. ஆனால், யாருமே அதைச் செய்ய முன்வரவில்லை. அப்போது ராணுவ வீரரே உதவி இருக்கிறார். இது சின்ன விஷயம் என்றாலும் இக்கட்டான நேரத்தில் அந்த பெண்ணுக்குப் பேருதவியாக இருந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+