பிரதமருக்கு தைரியமின்மை.. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு பயப்படுகிறது.. ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: சீனாவை எதிர்ப்பதற்கும் மோடி அரசு அஞ்சுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்தபோது நடைபெற்ற தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன் பிறகு, 5 சுற்று பேச்சுவார்த்தைகள், ராணுவ தளபதிகள் மட்டத்தில் நடைபெற்ற போதிலும் சீன ராணுவம் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு, சீனா எந்த ஓர் இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்று கூறினாலும், இந்திய ராணுவம் ரோந்து செல்வதற்குக் கூட சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து அடாவடியில் ஈடுபட்டு வருகிறது என்கிறது பல்வேறு ஊடக செய்திகள்.
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசு சீனாவின் லடாக் அத்துமீறலுக்கு எதிராக செயல்படுவதற்கு பயப்படுகிறது. தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனா முயற்சி செய்வது நன்கு தெரிகிறது. மீடியாக்களின் மௌனம் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட தைரியமின்மை, இந்தியாவுக்கு மிகப்பெரிய விலையை கொடுக்க போகிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சீன விவகாரத்தில் இந்தியா தைரியமாக எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்று ராகுல்காந்தி தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications